ரூ. 500, 1000 செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 7வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடக்கப்பட்டது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக் சபா, ராஜ்ய சபா ஆகிய இரண்டு அவைகளும் 7வது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்று முதல் எதிர்கட்சிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜக அரசு பதில் எதுவும் கூறவில்லை. மேலும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் வழக்கம் போல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. அப்போது, எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தனர். மேலும், சபாநாயகர் இருக்கையின் அருகில் வந்து கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சபாநாயகர் லோக் சபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய 7 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடங்கியுள்ளனர்.
இதே போன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications