பணப்பரிமாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல்.. ராகுல் குற்றச்சாட்டு !
500, 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு பின்னால் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மும்பை: பிரதமர் மோடி அரசின் பணப்பரிமாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி அறிவித்ததில் இருந்து மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் சில்லறைத் தட்டுப்பாடு, பழைய நோட்டுகளை மாற்றுவதில் உள்ள பிரச்சனை என நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக மக்கள் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கை சாமானியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மும்பையில் இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் மத்திய அரசின் முடிவினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் சாமானிய மக்கள் பாதிக்கப்பட வேண்டும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் பணப்பரிமாற்ற திட்டத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது எனவும் ராகுல் குற்றம் சாட்டினார். ஊழல் உள்ளதால்தான் இத்திட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.
கருப்புப் பணத்தை மீட்பதற்கான திட்டம் இதுவல்ல. வங்கிகளில் இப்போது வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்திருப்பவர்களா? விவசாயிகளும், அரசு ஊழியர்களும், சாமானியர்களும்தான் வரிசையில் நிற்கின்றனர். இத்திட்டத்தினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications