Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛தாம்பத்தியத்துக்கு மனைவி மறுப்பதும் கொடுமை தான்’’.. இளைஞரின் விவாகரத்தை உறுதி செய்த ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

போபால்: கணவருடன் தாம்பத்தியத்துக்கு மனைவி மறுப்பது என்பது ஒரு வகையான கொடுமை தான் எனக்கூறி இளைஞரின் விவாகரத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நாளில் அந்த பெண் தனது தாயின் வீட்டுக்கு சென்றார்.

wife husband relationship divorce madhya pradesh high court

அதாவது தேர்வுகள் எழுத வேண்டி உள்ளது எனக்கூறி இளம்பெண்ணை அவரது சகோதரர்கள் பிறந்த வீட்டுக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு தேர்வுகள் முடிந்தும் இளம்பெண் மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து கணவரின் குடும்பத்தினர் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்தனர். அப்போது அந்த இளம்பெண் கணவர் வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி அந்த இளம்பெண் சார்பில் சித்தி நகரில் உள்ள போலீஸ்நிலையத்தில் கணவரின் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இளம்பெண்ணை விவாகரத்து செய்ய புதுமாப்பிள்ளை முடிவு செய்தார்.

இதுதொடர்பாக அவர் சாத்னா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு செய்தார். அப்போது ‛‛திருமணமாகி 3 நாட்கள் மட்டுமே மனைவி எனது வீட்டில் இருந்தார். முதலிரவிலேயே என்னை பிடிக்கவில்லை. குடும்பத்தின் கட்டாயத்தால் தான் திருமணம் செய்ததாக கூறினார். இதனால் தாம்பத்திய உறவு எதுவும் வைத்து கொள்ளவில்லை'' என்று வாதம் வைக்கப்பட்டது.

மனைவி தரப்பில், ‛‛தேர்வு இருந்ததால் தான் பிறந்த வீட்டுக்கு வந்தேன். ஆனால் அதனை சாதகமாக பயன்படுத்தி கணவரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டனர். இதனால் நான் எனது கணவரின் வீட்டில் வாழ விரும்பவில்லை. அவருடன் பிறந்த வீட்டில் வாழ விரும்புகிறேன்'' என்ற வாதம் வைக்கப்பட்டது.

இதை கேட்ட குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் புதுமண தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே தான் அந்த இளம்பெண் சார்பில் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு மற்றும் நீதிபதி அமர்நாத் (கேஷர்வாணி) அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வேளையில் கணவர் தரப்பில், ‛‛திருமணம் முடிந்த 3 நாளில் இருவருக்கும் இடையே தாம்பத்தியம் எதுவும் நடக்கவில்லை. தேர்வு எழுதுவதாக பிறந்த வீட்டுக்கு சென்றவர் மீண்டும் சேர்ந்த வாழ மறுத்தார்'' என்று வாதிடப்பட்டது. அதேபோல் இளம்பெண் சார்பிலும் தன்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம், ‛‛கணவருடன் தாம்பத்தியத்துக்கு மறுப்பது என்பதும் ஒரு வகையான கொடுமை தான். இதனால் சாத்னா நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை மாற்றமின்றி உறுதி செய்கிறோம்'' எனக்கூறி உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+