சபரிமலைக்கு " இந்த" பெண்கள் வரமாட்டார்கள் - தேவசம் போர்டு பரபர தகவல்
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு உண்மையான பெண் பக்தர்கள் வரமாட்டார்கள் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.
சபரிமலை கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என 4 பேர் கொண்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய போவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

ஆலோசனை
எனினும் உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்துவது என்ற முடிவில் தேவசம் போர்டு உள்ளது. இதனால் பெண்களை எப்போது அனுமதிதப்பது என்பது குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பெண் பக்தர்கள்
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் சபரிமலைக்கு உண்மையான பெண் பக்தர்கள் வரமாட்டார்கள். பெண்ணியவாதிகள் மட்டுமே வருகை தருவர்.

100 ஏக்கர் நிலம்
வரும் ஐயப்பன் சீசனில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு தனியாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க காலஅவகாசம் வேண்டும். இந்த வசதிகளை விரிவுப்படுத்த ரூ.100 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

எண்ணிக்கை
நிலக்கல்லில் இடம் ஒதுக்கி தருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது பரிசீலனையில் உள்ளது. சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அக்கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் உயரும் என்று அவர் தெரிவித்தார்.

கோரிக்கை
இதனிடையே சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது என்பதற்கு பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பது என்ற வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

அவசர சட்டம் பிறப்பிக்க
இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து பந்தள அரண்மனையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசை அணுகி சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தாதபடி அவசர சட்டம் பிறப்பிக்க கோரவுள்ளதாக முடிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications