For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: 'நாங்கள் பிச்சைக்காரர்கள்' - நாடாளுமன்றத்தில் உணர்ச்சிவயப்பட்ட தேவ கவுடா

By BBC News தமிழ்
|
பாஜக
Getty Images
பாஜக

இன்றைய (ஏப்ரல் 6) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

குஜராத் தேர்தல் பிரச்சாரம் முதல் காவி நிற தொப்பி அணிய பாஜகவினர் முடிவு செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்து தங்களுக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த பாணியை குஜராத் மாநிலத்தில் பின்பற்ற பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.

முக்கிய நிகழ்ச்சிகளில் பல்வேறு நிற தலைப்பாகை அணியும் வழக்கம் பாஜக தலைவர்கள் மத்தியில் உள்ளது.

எதிர்வரும் குஜராத் தேர்தலையொட்டி, பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கும் வகையில் அகமதாபாத்தில் பிரதமர் மோதி சமீபத்தில் ஊர்வலம் நடத்தினார். அதில் பிரதமர் மோதி தலைப்பாகைக்கு பதிலாக காவி நிறத் தொப்பி அணிந்திருந்தார். இதையடுத்து குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் காவி நிறத் தொப்பி அணிவது என்ற யோசனை அக்கட்சிக்கு உருவானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் முதல், எம்.பி., எம்எல்ஏ மற்றும் தொண்டர்கள் வரை அனைவரும் காவி நிறத் தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரே வடிவில், சிறப்பு வகை காவித்தொப்பி தயாராகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
Getty Images
பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் விலை கடந்த மார்ச் 30ஆம் தேதி, ஒரு லிட்டர் 106 ரூபாய் 69 காசுக்கு விற்பனையான விலைதான் புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதன் விலை வரலாறு காணாத உச்சமாக பதிவாகி வருகிறது.

பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் நேற்று நூறு ரூபாயைத் தாண்டியது. நேற்று ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய் 18 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 3ஆம் தேதி, ஒரு லிட்டர் டீசல் 102 ரூபாய் 59 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது தான் இதுவரை அதிகபட்ச விலை உயர்வாக இருந்தது.

அதன் பின்னர், விலை குறைந்ததால், ஒரு லிட்டர் டீசல் ரூ.100-க்கு கீழ் வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

செவ்வாய்க்கிழமையன்று, பெட்ரோல் லிட்டருக்கு 75 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 9 காசுக்கு விற்பனை ஆனது. டீசல் நேற்று லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 18 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

காவிரி விவகாரத்தில் உணர்ச்சிவசமாக பேசிய முன்னாள் பிரதமர் தேவே கவுடா

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேச எழுந்தபோது, உணர்ச்சிவசமடைந்து, "நாங்கள் பிச்சைக்காரர்கள்", என்று பேசியதாக 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

தேவே கவுடா
Getty Images
தேவே கவுடா

காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய 88 வயதான கவுடா, "காவிரி ஆற்றில் இருந்து வரும் குடிநீர் பங்கு பெங்களூரு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. நான் குடிநீர் பிரச்சினை பற்றி மட்டுமே பேசுகிறேன். காவிரி பிரச்சினை பற்றி எனக்கு தெரியும். அது குறித்து நிறைய பேச முடியும். ஆனால் நான் அதை இப்போது இங்கு எழுப்ப போவதில்லை", என்று தெரிவித்தார்.

அப்போது, கவுடா சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுப்புவார் என்பதை உணர்ந்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவரை உட்காரும்படி சைகை செய்தார்.

கவுடா பேச எழுந்த போது, "குடிநீர் குறித்து உங்களின் கருத்துகளை பகிருங்கள். அவ்வளவே. மற்ற எந்த சர்ச்சையும் எழுப்பாதீர்கள்" என்று நாயுடு தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=UVy3iiHMvpU

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Deve Gowda's emotional speech in Rajya Sabha, Bengalureans are beggars for water
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X