"அண்ணி"யை.. குமட்டும் ஆபாசம்.. "மைனர்" மைத்துனரின் அட்டகாசம்.. அலறி போலீசுக்கு ஓடிய பெண்..!
அண்ணிக்கு பாலியல் தொல்லை தந்த நபரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்
கான்பூர்: அண்ணி என்றும் பாராமல் இப்படி ஒரு காரியத்தை செய்த, மைத்துனரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தது.. அந்த பெண்ணுக்கு ஆண் வாரிசு இல்லை என்ற காரணத்திற்காக, நடுரோட்டில் கட்டி வைத்து அடித்து தாக்கி உள்ளனர்..
அந்தரங்க உறுப்பிலும் கொடுமையாக அடித்து கட்டையால் தாக்கி உள்ளனர்.. இதன்பிறகு கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்தது.

அந்தரங்க உறுப்பு
பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. திருமணமாகி பல வருடமாகிவிட்டது.. ஆனால் குழந்தை இல்லை.. அந்த குடும்பத்தின் மூத்த மகனை., அந்த பெண் திருமணம் செய்திருந்தார்... மருமகள் குழந்தை பெற்றுத்தராத கோபம் மாமியாருக்கு நாளுக்கு நாள் அதிகமானது.. மருமகள் கர்ப்பம் தரிக்காத காரணத்தால், எப்படியாவது அவரை கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று பிளான் போட்டார்.. அதன்படி, தன்னுடைய 2 இளைய மகன்களையும், மருமகளின் அறைக்கு அனுப்பி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்யுமாறு சொன்னாராம்..

அண்ணி
அதேபோல, மைத்துனர்கள் 2 பேரும், அண்ணி என்றும் பாராமல், ரூமுக்குள் நுழைந்து பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண் அங்கிருந்து தப்பி போலீசுக்கு சென்று, புகார் தந்தார்.. போலீசாரும் விசாரித்தனர்.. அதற்கு பிறகு அந்த கேஸ் என்ன ஆனது என்று தெரியவில்லை.. இப்படித்தான் நம்முடைய சென்னையிலும் கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்தது. இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் மனு தந்தார்.

நிர்வாணமாக நின்றார்
அந்த மனுவில், "என்னுடைய கணவரின் தம்பி, எனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.. சம்பவத்தன்று அண்ணி என்றும் பாராமல் என் முன்பு நிர்வாணமாக நின்று, ஆபாச செயல்கள் புரிந்து என்னை பாலியல் உறவுக்கு அழைத்தார். எனவே, மைத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். உடனே போலீசாரும் இதை விசாரித்தபோது, நடந்த சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. அந்த மைத்துனரை தூக்கி உள்ளே வைத்தனர்.

ஆபாச மெசேஜ்
மீண்டும் ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர், அசிங்க அசிங்கமாக மெசேஜ் அனுப்பி உள்ளார்.. யார் என்று தெரியவில்லை.. ஆனால், மெசேஜ் வருவது மட்டும் நிற்கவில்லை.. பிறகு, அடிக்கடி போன் செய்து, அந்த பெண்ணிடம் முத்தம் கேட்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதை பற்றி தன்னுடைய கணவனிடம் சொல்லி உள்ளார்..

வார்னிங்
இதனால் ஆத்திரமடைந்த கணவனும், அந்த நபரை போனில் கூப்பிட்டு எச்சரித்துள்ளார்... அப்போதும் அந்த நபர் அடங்கவில்லையாம்.. ஓயாமல் போனை செய்துள்ளார்.. ஏன் எனக்கு இப்படி போன் செய்து தொந்தரவு தருகிறீர்கள் என்று இந்த பெண் கேட்டுள்ளார்.. முதல்ல ஒரு முத்தம் கொடுங்கள், அப்பறம் நான் யார்? என்ன விவரம் என்று சொல்கிறேன் என்றாராம்.. இந்த பெண் முத்தம் தராத காரணத்தினால், அந்த நபரும் யார் என்று கடைசி வரை தெரியவில்லை.. நாள் ஆக ஆக, அந்த இளைஞரின் பேச்சு ஆபாசமாக சென்று கொண்டே இருந்தது.

தலைமறைவு
இதன்பிறகு, அந்த நம்பர் எந்த பகுதியை சேர்ந்தது என்பதை, இந்த பெண்ணே விசாரிக்க ஆரம்பித்தார்.. இறுதியில், தங்கள் மாமியார் வீடு வசிக்கும் கிராமத்தை சேர்ந்த செல்போன் நம்பர் அது என்பதும் தெரியவந்தது. கடைசியில், அந்த இளைஞர், தன்னுடைய மைத்துனர் உறவு என்பது தெரிந்து அந்தபெண் அதிர்ந்து போய்விட்டார்.. அதற்கு பிறகு, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார்.. இது குறித்து போலீசால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அதற்குள் அந்த மைத்துனரை காணவில்லை.. தேடி கொண்டிருக்கிறார்கள் போலீசார்..!












Click it and Unblock the Notifications