கலாம் மறைவிலும் காசு பார்க்கிறதா பிளிப்கார்ட்? விங்ஸ் ஆப் பையர் புத்தக விலை திடீர் உயர்வு
டெல்லி: அப்துல் கலாம் மறைவையடுத்து அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனம் அதிக கட்டணத்திற்கு விற்பனை செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவயடுத்து அவரது வாழ்க்கை வரலாற்று நூலான அக்னி சிறகுகள் மற்றும் அதன் ஆங்கில பதிப்பான Wings of Fire ஆகிய நூல்களுக்கு வாசகர்கள் மத்தியில் கிராக்கி ஏறியுள்ளது. அந்த நூலை படித்து கலாம் பற்றி அறிய பலரும் விரும்புகின்றனர்.

இதை சாதகமாக்கிக் கொண்டு ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் புத்தகத்தின் விலையை மடமடவென ரூ.40 அளவுக்கு உயர்த்திவிட்டதாக வாசகர்கள் டிவிட்டரில் ஆதங்கம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிளிப்கார்ட் கொடுத்துள்ள விளக்கம்: Wings of Fire புத்தகத்தை விற்பனை செய்ய 28 பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். 2014ம் ஆண்டு ஏப்ரலில் புத்தகம் மறுபதிப்பான போது, அதன் விலை ரூ.275. இவ்வாண்டு ஜூன் மாதத்தில் புத்தகத்தின் விலை ரூ.295 ஆகியது. ஜூலை மாதத்தில் புத்தக விலை ரூ.325 ஆகியது. இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், பிளிப்கார்ட்டின் போட்டி நிறுவனம், இப்புத்தகத்தை ரூ.210 என்ற விலையிலேயே விற்பனை செய்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications