உல்லாசம்.. "அசிங்கமா" மாட்டிக்கிட்டாங்க.. "அந்த" கோலத்தில் சிறைபிடிப்பு.. அதுக்குனு இப்படியா? கொடுமை
அகர்தலா: கள்ள ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாரின் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.
போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பஞ்சாயத்து : பஞ்சாயத்து என்ற பெயரில் ஊருக்கு நடுவே பெண்களை நிற்க வைத்து, அவர்களின் மானத்தை வாங்குவதும், இழிவாக நடத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது பழங்குடி மற்றும் தலித் பெண்களே என்பது, அதைவிட வருத்தமான செய்தி.. ராஜஸ்தானில், சன்சி நாடோடி என்பவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் சமூகத்தில், கல்யாணம் ஆனதுமே, அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்வார்களாம்.. இந்த டெஸ்ட்டில் அந்த பெண் வெற்றி பெற வேண்டுமாம்..
அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும்... இப்படித்தான் ஒரு பெண்ணை, கன்னித்தன்மை டெஸ்ட் செய்துள்ளனர். இதில் அந்த பெண் தோல்வி அடைந்து விட்டாராம்,. அதனால், ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை மாப்பிள்ளை வீட்டுக்கு தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பஞ்சாயத்தும் தரப்பட்டுள்ளது.
கள்ளக்காதலன்: சமீபத்தில், திரிபுராவில் ஒரு சம்பவம் நடந்தது.. மேற்கு திரிபுரா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்திருந்தாக கூறி, 45 வயது பெண் ஒருவரை, 5 பெண்கள் மொத்தமாக சேர்ந்து கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம் நடந்தது.. இதோ அதே திரிபுராவில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது.
அம்மாநிலத்தில், பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதி.. இங்கு ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், அவருக்கு கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இதுவே கள்ளக்காதலாகவும் மாறி உள்ளது.. கள்ளக்காதலியை தேடி அந்த நபர், ஊருக்குள் வந்து போவது, கிராம மக்களுக்கு தெரிந்துவிட்டது.
உல்லாசம்: எனவே, இவர்களை கையும் களமாக பிடிக்க காத்திருந்தனர். சம்பவத்தன்றும், கள்ளக்காதலியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார் இந்த நபர்... வழக்கம்போல இருவரும் உல்லாசத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரம்பார்த்து, கிராம மக்கள், வீட்டை சுற்றி வளைத்தனர்.. இருவரையும் வீட்டிற்குள் வைத்தே சிறை பிடித்தனர். இதனால், இருவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.. கதவை உடைத்து உள்ளே சென்று, 2 பேரையும் கட்டி தரதரவென ஊருக்கு நடுவில் இழுத்து வந்தனர்.. அங்கிருந்த கரண்ட் கம்பத்தில் 2 பேரையும் கட்டிவைத்தனர். பிறகு பஞ்சாயத்து தலைவர்கள் வந்தார்கள்.. அதேபோல, அந்த நபரின் மனைவிக்கும், தகவல் தரப்பட்டு அவரையும் பஞ்சாயத்துக்கு வரவழைத்தனர்.
பல மணி நேரம் இவர்களை கட்டி வைத்தார்கள்.. பிறகு, அந்த இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து தாக்க துவங்கினார்கள்.. அதேபோல அந்த நபருக்கும் பலத்த அடி விழுந்தது..
வீடியோ: அதற்குள் தகவலறிந்து போலீசார் வந்துவிட்டார்கள்.. படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு, பெலோனியா ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்..
இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் தரப்பிலிருந்தோ, அல்லது அந்த நபரின் மனைவியோ எந்த புகாரும் தரவில்லை என்பதால் விசாரணை மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. இவர்களை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து உதைக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications