ச்சீ..ச்சீ.. ப்ளாட்பார டிவியில் "ப்ளே" ஆன ஆபாச வீடியோ.. திடீர்னு அந்த மெசேஜ் வேற.. அலறி ஓடிய பயணிகள்
பாட்னா: ஒரு மாநிலத்தின் தலைநகரில் உள்ள முக்கியமான ரயில்வே ஸ்டேஷன், தற்போது பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.. காரணம், தொடர்ந்து இங்கு நடக்கும் ஆபாச சம்பவங்கள்தான்.. என்ன நடக்கிறது பீகாரின் பாட்னாவில்?
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் எந்நேரமும் பயணிகளின் வருகை அதிகரித்தபடியே இருக்கும்.. இதனால் பிஸியாகவே காணப்படும்.
சில நாட்களுக்கு முன்பு, இந்த ஸ்டேஷனில், வைக்கப்பட்டுள்ள ஒரு டிவியில் திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பானது.. அதுவும் காலை நேரத்தில் ஆபாச வீடியோ தானாகவே ப்ளே ஆகி ஓட ஆரம்பித்துவிட்டது..

ஆபாச வீடியோ: விளம்பரத்திற்காக 10வது நடைமேடையில் பொருத்தப்பட்டிருக்கும் டிவியில், காலை 9.30 மணிக்கு விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது... அதில், படுக்கையறை காட்சிகள் அப்பட்டமாக பதிவாகியிருந்தன.. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் சிலர் அங்கிருந்து அலறி ஓடினர்.. மேலும் சிலர் அங்கிருந்து நகர்ந்து, சற்று தொலைவாக போய் நின்று கொண்டார்கள்.. இன்னும் சிலர் அந்த வீடியோ செல்போனில் படம் பிடித்து, அதை பிளர் செய்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவிட்டனர்..
அந்த வீடியோதான் வெளியாகி மொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்துவிட்டது. ஆடியோவுடன் கூடிய அந்த வீடியோ திடீரென ஒளிபரப்பானதால், அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.. கிட்டத்தட்ட 3 நிமிஷம் அந்த வீடியோ ஓடியிருக்கிறது.. அந்த நேரம்பார்த்து, தனாபூர் மண்டல ரயில்வே மேலாளர் பிரதாப் குமார் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆய்வு செய்ய வந்திருந்தார்.. உடனே அவரிடம் ரயில்வே போலீசார் ஓடிச்சென்று, வீடியோ ஓடுவதை பற்றி புகார் சொன்னார்கள்..
அலர்ட் ஆன அதிகாரிகள்: அதற்குள் சில பயணிகளும் இதைப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் தந்தனர்.. பயணிகளின் புகாரையடுத்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சி என்ற நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டது. தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்ததாக காரணம் சொன்னாலும், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.

அதற்குள் இன்னொரு சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.. இதுவும், அதே பீகாரில் நடந்துள்ளது.. பாகல்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள டிவிக்களில், திடீரென ஆபாசமான விளம்பர மெசேஜ்கள் தானாகவே ஓடியதாம்.. ரயில்களின் நேரம், வருகை குறித்த அறிவிப்புகளை டிவியில், பயணிகள் சீரியஸாக பார்த்து கொண்டிருந்தனர்.. அப்போதுதான் திடீரென ஆபாச விளம்பரம் ஓடியுள்ளது.. இதை பார்த்ததுமே பயணிகள் அதிர்ந்து போனார்கள்.. ஒருசிலர் இதையும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்..
ஆபாசம் ஆபாசம்: மொத்தம் 10 நிமிஷத்துக்கு ஆபாச விளம்பரம் டிவியில் ஓடியுள்ளது.. உடனடியாக இந்த விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.. இதுகுறித்த விசாரணையையும் போலீஸார் கையில் எடுத்துள்ளனர் என்றாலும், இப்படியான சம்பவங்கள் ஏன் பொதுவெளியில், அதுவும் அடிக்கடி நடக்கிறதே என்ற கேள்விகள் எழுகின்றன.. பீகாரில் இப்படியெல்லாம் நடப்பது புதிது கிடையாதாம். 1990 களின் மத்தியிலும், பாட்னா ரயில்வே ஸ்டேஷனில் ஆபாச படம் ஒளிபரப்பானதாக தகவல்கள் சொல்கின்றன..!!
நேற்று நடந்த இந்த பாகல்பூர் சம்பவத்தை பொறுத்தவரை, ஆபாச வாசகங்கள் அந்த டிவியில் ஓடியதை முதலில் அங்கிருந்த பயணிகள் கவனிக்கவில்லையாம்.. அதற்கு பிறகுதான், வாசகங்களை படித்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. மிகவும் இழிவான மற்றும் அருவெறுப்பான வார்த்தைகளை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் படம்பிடித்து சோஷியல் மீடியாவிலும் பரவவிட்டுள்ளதால், இந்த விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது..
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும், பணியில் இருந்த டெக்னிஷியன்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது, பாகல்பூர் மாநகராட்சி, நகரை அழகுபடுத்தும் பணிக்காக ஜீவன் ஜாக்ரிட்டி சொசைட்டிக்கு ஒப்பந்தம் வழங்கியது தெரியவந்தது.. போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் சில இடங்களில் எல்இடி டிஸ்ப்ளே போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன...
ஒவ்வொரு LED டிஸ்ப்ளே போர்டும், ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.. இது சிலரால் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதனால்தான், இவ்வாறு மோசமான செய்தி திரையில் காட்டப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.. எனினும், இதுகுறித்த உண்மைத்தன்மையை கண்டறிவதுடன், பொதுஇடங்களில் இவ்வாறு நடக்காத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications