டெல்லியைத் தொடர்ந்து கேரளாவிலும் பழமையான டீசல் கார்களுக்கு தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து கார்களுக்கும் ஒரு மாத காலத்திற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஓடும் கார்கள், பஸ்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் டீசல் மூலம் இயங்குவதாலும், அவற்றில் பெரும்பாலானவை 10 ஆண்டுகளை கடந்து பழுதடைந்த நிலையில் ஓடுவதாலும் இந்த மாசு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், டெல்லியில் புதிய டீசல் கார்களை (வாடகைக் கார்) பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் பழைய கார்கள், உரிம காலம் முடியும் வரை இயங்க அனுமதி அளித்தது.
இந்நிலையில், கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து கார்களுக்கும் சுமார் ஒரு மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொச்சி மாவட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரளாவில் உள்ள 6 முக்கிய நகரங்களில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்டும்.
2000 சிசி எஞ்சினுக்கு மேல் உள்ள புதிய வாகனங்களுக்கு இனி அனுமதி கிடையாது. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பொது போக்குவரத்து பேருந்துகளுக்கு இது பொருந்தாது. நீதிமன்றத்தின் இந்த முடிவு கவலை அளிப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
-
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications