ஆர்.கே.நகர் எக்ஸிட் போலில் 37% ஆதரவுடன் தினகரனுக்கு வெற்றியாம்... சொல்கிறார் சு.சுவாமி
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 37% வாக்குகள் பெற்று வெல்வார் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லி: இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 37% வாக்குகள் பெற்று வெல்வார் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியாகவே இத்தேர்தல் முடிவடைந்துள்ளது.

இன்றைய வாக்குப் பதிவு முடிந்த சிறிது நேரத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஆர்கே நகர் எக்ஸிட் போல் முடிவுகளில் தினகரன் 37% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல செய்தி என பதிவிட்டிருக்கிறார்.
Exit poll in RK Nagar puts TTV Dinakaran ahead with 37 % votes and winner. Good news
— Subramanian Swamy (@Swamy39) December 21, 2017
ஆனால் எந்த டிவி சேனலில் வெளியான எக்ஸிட் போல் என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடவில்லை. ஆர்கே நகர் வாக்குப் பதிவுக்கு முன்பாக பேராசிரியர் ராஜநாயகம் குழு வெளியிட்ட இரண்டு கருத்து கணிப்புகளிலுமே டிடிவி தினகரன் வெல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications