இஸ்லாமியரின் வக்பு வாரிய 50% சொத்துகள் அரசு வசமாகும்- புதிய சட்டத்துக்கு எதிராக திமுக வழக்கு- ஆ.ராசா
டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது வக்பு வாரிய மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கூறியதாவது: 650 பக்கங்களைக் கொண்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை நேற்று இரவு 10 மணிக்கு எங்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது, நாளை காலை இந்த அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏற்றுக் கொள்வதற்காக வாக்கெடுப்புக்கு வைக்கிறோம்,; அதனால் எதிர் கருத்துகளை உடனே தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதன்பின்னர் நாங்கள் கேட்டுக் கொண்டதால் 4 மணிக்குள் தர வேண்டும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக உட்கார்ந்து எங்களது எதிர்கருத்துகளை நாங்கள் கொடுத்துள்ளோம். இஸ்லாமியர்களின் வக்பு சொத்துகளை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கெட்ட உள்நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1995, 2013-ல் வக்பு வாரியத்துக்காக காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களை குறி வைத்து இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இதை திருட்டுத்தனமான நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.
இஸ்லாமியர் உரிமைகளைப் பாதுகாக்க செம்மைப்படுத்திக் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களை தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திருட்டுத் தனமாக எடுத்துள்ளது. இதை வெளியில் சொன்னால் தெரிந்துவிடும் என்பதை மறைக்கும் வகையில் புதியதாக ஒரு மசோதாவை கொண்டு வருவதாக சொல்லி இருக்கின்றனர். அதாவது வக்பு வாரியம் தொடர்பாக 1954-ல் என்ன சட்டம் இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு போயிருக்கிறார்கள்.
மத்திய பாஜக அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தால் 40% முதல் 50% இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகள் அரசாங்கத்துக்கு போய்விடும் அபாயம் இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ள வக்பு வாரிய சொத்துகளுக்கும் கூட இந்த புதிய சட்ட திருத்தம் பொருந்தும். அதையும் சேர்த்தால் மேலும் 10% சொத்துகள் அரசாங்கம் வசமாகிவிடும். இதன் மூலம் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் பெருநகரங்களில் உள்ள பல லட்சம் ரூபாய் கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகள் அரசு வசமாகும். இதற்காகவே இந்த திருட்டுத்தனமான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இவ்வாறு ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா எம்பிக்கள் தெரிவித்தனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications