ஆப்கான்: இந்து, முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரையும் இந்தியா மீட்க உதவ வேண்டும்: டி.ஆர். பாலு
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இதனை ஏற்று நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கு ஆப்கான் நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
பாலியல் புகாரா? பள்ளிகளில் புகார் பெட்டிகள்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி.

யார் யார் பங்கேற்பு?
இதனையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆப்கான் விவகாரம் குறித்த அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி, வி. முரளீதரன், மீனாக்ஷி லேகி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன், வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்லா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

மத்திய அரசு நிலை என்ன?
இதில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவைப் பொறுத்தவரையில் வாய்ப்புள்ள அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 15,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் இதுவரை 800க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 5,000க்கும் அதிகமானோர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என்றார். இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தேவி ஷக்தி ஆபரேஷன் மூலம் 6 மீட்பு விமானங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான இந்தியர்களை மீட்டு கொண்டுவந்துவிட்டோம். எஞ்சி இருக்கும் இந்தியர்களையும் நிச்சயம் பாதுகாப்பாக அழைத்து வருவோம். ஆப்கானியர்கள் சிலரையும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளோம். ஆப்கான் தொடர்பாக இன்னும் பல ஆலோசனைகள் நடைபெற வேண்டியது உள்ளது. தற்போதைய நிலையில் மீட்பு பணிகளில்தான் முழு கவனம் செலுத்துகிறோம். இதனை அனைத்து கட்சித் தலைவர்களிடமும் விளக்கி இருக்கிறோம் என்றார்.

மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. நாட்டு நலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நிலைமைகளை பொறுத்திருந்து பார்க்கலாம் என அரசு தரப்பில் எங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து கட்சித் தலைவர்களும் கூட இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என்றார். மேலும், ஆப்கான் பெண் தூதர அதிகாரி வெளியேற்றப்பட்டது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு, தவறுதலாக நடந்துவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டோம் என்றார் மல்லிகார்ஜூன கார்கே.

திமுக வேண்டுகோள்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆப்கானிஸ்தானுடன் நீண்டகால நல்லுறவை பேணும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டித் தந்தது உட்பட ஏராளமான உழைப்பு ஆப்கானில் நம்மால் செலவிடப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டுகால உழைப்பை நாம் வீணடித்துவிடக் கூடாது. மத்திய அரசு பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறது. தற்போதைய நிலையில் காபூல் விமான நிலையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என அனைத்து சமூகத்தினரையும் மீட்டு வர வேண்டும். பொதுவாக மத்திய அரசு அனைத்து நாடுகளுடனும் பகையுடன் இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி சரியாக இருக்க முடியும்? இவ்வாறு டி.ஆர்.பாலு, திருச்சி சிவா தெரிவித்தனர்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications