சந்திரயான் 3: சகோதரி திருமணத்திற்கும் செல்லாத வீரமுத்துவேல்.. இஸ்ரோ அலுவலகத்திலேயே மூழ்கிய விஞ்ஞானி
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்க 3 நாட்கள் இருந்த நிலையில் தனது சகோதரியின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளாமல் தொடர்ந்து இஸ்ரோவில் பணியாற்றியுள்ளார் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 என்ற விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஏவப்பட்டது. இது பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சந்திரயான் 3 கடந்த 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என கணிக்கப்பட்டது.
ஏனெனில் இந்த 14 நாட்களுக்கு நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி படும். அப்போது சந்திரயான் 3 விண்கலம் சூரிய வெளிச்ச சக்தியை பெற்றுக் கொண்டு பணியாற்ற ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை அனுப்பப்பட்டன.
இதில் பிரக்யான் ரோவர் நிலவை வட்டமடித்து புகைப்படங்களை எடுக்கும். அந்த புகைப்படங்களை லேண்டர் பூமிக்கு அனுப்பும். இஸ்ரோவிற்கு ரோவருடன் எந்த நேரடி தொடர்பும் இல்லை. சந்திரயான் திட்டமே தமிழரான மயில்சாமி அண்ணாதுரையால் தொடங்கப்பட்டது. முதல் திட்டத்திற்கு அவர்தான் இயக்குநர்.
அது போல் சந்திரயான் 2 திட்டத்திற்கும் வனிதா எனும் தமிழ் பெண்ணே திட்ட இயக்குநராக பணியாற்றினார். தற்போது சந்திரயான் 3 விண்கல திட்டத்தில் விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல்தான் (46) இயக்குநர். இவரது தந்தை ரயில்வே ஊழியராவார். ரயில்வே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வீரமுத்துவேல் படித்தார்.
பின்னர் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கலில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டம் முடித்தார். பின்னர் திருச்சியில் உள்ள என்ஐடியில் முதுநிலை படிப்பை முடித்தார். 2003 ஆம்ஆண்டு எச்ஏஎல் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் அந்த பணியை மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி மாலை சந்திரயானில் இருந்து லேண்டரும், ரோவரும் தனித்தனியே பிரிந்து தரையிறங்கியது. இந்த வெற்றியை உலக நாடுகளே உற்று நோக்கி பார்த்தன. குறைந்த செலவில் யாருமே செல்ல முயற்சிக்காத தென் துருவத்திற்கு இந்தியா கால் பதித்து முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.
இந்த வரலாற்று பெருமையை லைவ்வாகவே கண்டுகளிக்கவும் இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்தது. பள்ளியில் தான் சுமாராக படிக்கும் மாணவன் என்றும் கல்லூரிக்கு சென்றவுடன்தான் நன்றாக படித்ததாகவும் வீரமுத்துவேல் தெரிவித்திருந்தார். மேலும் இது எனது வாழ்வில் மகிழ்ச்சியான தருணம். அனைவரின் உழைப்பிற்கும் கிடைத்த பலன் என்றும் கூறியிருந்தார். வீரமுத்துவேலின் உழைப்பிற்கு மற்றொரு உதாரணம் சொல்லலாம்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி வீரமுத்துவேலின் சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. இநத திருமணத்தில் கூட வீரமுத்துவேல் கலந்து கொள்ளவில்லை. 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 திட்ட பணிகளில் கவனம் செலுத்தினார். உறவினர்கள் எல்லாரும் திருமண வைபவத்தில் கலந்து கொண்ட நிலையில் வீரமுத்துவேல் மட்டும் இஸ்ரோ அலுவலகத்தில் இருந்தார். இந்த திட்டப்பணிகளுக்காக தனது ஒரே மகளை கூட அவர் பார்க்க வருவதில்லை என வீரமுத்துவேலின் தந்தை தெரிவித்திருந்தார். மருமகளிடம் அவர் வந்தாரா என கேட்டால் , வரவில்லை என்றே கூறுவார். இத்தனை தியாகங்கள் செய்ததற்கு கிடைத்த பலன் என அவரது தந்தை ஆனந்த கண்ணீர் வடித்தார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications