விமான விபத்து நடக்கும் என்று கணித்த பெண் ஜோதிடரின் பிற கணிப்புகள் என்ன சொல்கிறது தெரியுமா?
அகமதாபாத்: இந்த ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான விமான விபத்து ஏற்படும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் பதிவிட்டிருந்த எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்று அவர் கணித்துள்ள முக்கிய கணிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தீப்பிடித்து எரிந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியுள்ளதாவது: ''2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்படும். மேலும், விமான விபத்து தொடர்பான தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும். இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன்.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது. குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆர்த்ராவின் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்'' என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து நடக்கும் என்று கூறிய மேற்கண்ட பதிவை சுட்டிக்காட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே (ஜூன் 5 ஆம் தேதி) மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ''2025 ஆம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாக நம்பிக்கொண்டுதான் உள்ளேன்'' என்று தெரிவித்திருந்தார்.
மேலும், டாடா நிறுவனம் ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடற்பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே ஆச்சரியப்படுத்தும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
ஜோதிடர் ஷர்ஸ்மிதாவின் இந்த துல்லயமான கணிப்பு குறித்த பதிவை நெட்டிசன்கள் பலரும் தேடி தேடி படிக்கத் தொடங்கியுள்ளனர். இதேபோல, அவர் கணித்து நடந்த முக்கிய கணிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருக்கப் போகிறது. அதனால் அவர்களுடைய ராணுவம் கூட உதவியற்றதாகிவிடும். இம்ரான் கான் சில மாதங்களில் சிறையில் இருந்து வெளியே வரலாம். பாகிஸ்தானில் உணவுத் தட்டுப்பாடு, இயற்கை பேரழிவு ஏற்படும், உள்நாட்டுப் போர் நடக்கும், அதிக இறப்பு விகிதம் போன்றவை ஏற்படும். ஒரு வருடத்தில் பாகிஸ்தான் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். வங்கதேசம் எல்லை மீறி நடந்து கொள்ளாமல் வரம்புக்குள் இருக்கும். இந்தியர்கள் நிதானமாக உட்கார்ந்து 2025 இல் பாகிஸ்தானின் நாடகத்தை பார்த்தால் போதும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு ஏற்றாற்போல பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்தியாவிடம் பாகிஸ்தான் பலமாக அடிவாங்கியுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதற்கான லீடாக பாகிஸ்தானில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக ஜோதிடர் கணித்துள்ளார். அதேபோல, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தினர் தங்களை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பலுசிஸ்தான் தலைநகர் கைப்பற்றுப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே ஜோதிடர் ஷர்ஸ்மிதாவின் கணிப்புடன் ஒத்துப் போவதால் பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிட்டிருந்த பதிவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஈரானின் பொருளாதாரம் அழிக்கப்படும். ஈரானின் அஸ்திவார அட்டவணையின் 2 ஆவது வீட்டில் கேது, ஜனன ராகு மற்றும் சனியைக் கடப்பதால் அவர்கள் போருக்குத் தள்ளப்படுவார்கள். நம்பிக்கையுடன் அவர்கள் அதனை எதிர்க்க முடியும். கெஜ்ரிவாலைப் போல ஈரான் 2027 க்குப் பிறகு மீண்டும் பலம் பெறத் தொடங்குவார்கள். பல இஸ்லாமிய நாடுகள் ஈரானை கூட்டாக ஆதரிக்கத் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் பதிவுக்கு ஏற்றாற்போல இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அமெரிக்காவுடன் ஏற்கனவே ஈரானுக்குப் பிரச்சனை உள்ளது. இதனால், போருக்கான சூழல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானுக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்காமல் இருந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து குடைச்சல் வருவதால் இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியுள்ளன.

அதேசமயம் சவுதி அரேபியாவும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் மீது வர்த்தகத் தடைபோடப்பட்டுள்ளதால் ஈரானின் பொருளாதாரம் மோசமாகவே உள்ளது. இந்நிலையில், ஜோதிடர் ஷர்ஸ்மிதா 2027க்குப் பிறகு ஈரான் மீண்டும் பலம் பெறத் தொடங்கும் என்று கணித்துள்ளார். அதனை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications