தலைக்கேறிடுச்சு காமம்.. அதுக்குன்னு இப்படியா.. எகிறி தப்பிய இளம்பெண்.. 50 வயது நபரை தூக்கிய போலீஸ்
டெஹ்லான்: தலைக்கேறிய காமம் காரணமாக, தறிகெட்டு நடந்து கொண்டுள்ளார் இந்த தந்தை.. இப்போது போலீசார் இவரை தூக்கி உள்ளே வைத்துள்ளனர். பெண்ணை பெருமையாக போற்றுவதாக சொல்லும், இந்த பாரத நாட்டில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் டெஹ்லான் அடுத்துள்ளது முகந்த்பூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த பெண்.. திடீரென அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.

20 வயது பெண்: தன்னுடைய மகளை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதால், அந்த பெண், இன்னொரு நபரை கல்யாணம் செய்து கொண்டார். இப்போது, அந்த மகளுக்கு 20 வயதாகிவிட்டது.
இவர்கள் 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.. இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, தாயின் இரண்டாவது கணவர், வேலையை காட்டிவிட்டார்.. 20 வயது பெண்ணை, அந்த 50 வயதுடைய நபர், மிரட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. பிறகு இதுபற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்றும் கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார்.
பலாத்காரம்: அந்த பெண்ணும், மிரட்டலுக்கு பயந்து அம்மாவிடம் எதையுமே சொல்லவில்லை. இதுவே, அந்த 2வது கணவனுக்கு வசதியாக போய்விட்டது.. இதற்கு மேல் தன்னை பற்றி அம்மாவிடம் சொல்லப்போவதில்லை என்று நினைத்து, வீட்டில் அந்தப்பெண் தனியாக இருக்கும்போதெல்லாம், பல முறை அந்த நபர் பலாத்காரம் செய்து வந்துள்ளார்...
ஒருகட்டத்தில், அந்த நபரின் அட்டகாசமும், டார்ச்சரும் தாங்காமல், எப்படியாவது அங்கிருந்து தப்ப நினைத்தார் இளம்பெண்.. இதற்காக, தன்னுடைய கிராமத்திலிருந்து, சற்று தொலைவிலுள்ள புரைன் என்ற கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய்மாமாவை தேடி போனார்.. அவரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி கதறி கதறி அழுதார்..
விசாரணை: அப்போதுதான் அந்தப்பெண் கர்ப்பமாக இருப்பதும் மாமாவுக்கு தெரியவந்தது.. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்.. தாயின் 2வது கணவர் குறித்து புகாரையும் தந்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிந்தர் கவுர் சொல்லும்போது, "பெண்ணின் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக IPC 376 C உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார். இப்போது அந்த இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் தொடர் சிகிச்சை தரப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications