Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவரக்கத்தியாலேயே.. சலூன் கடைக்காரரும், எதிர்வீட்டு பியூட்டி பார்லரும்.. உ.பி.யை உலுக்கிய 2 பிஞ்சுகள்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உலகமே அறியாத 2 பிஞ்சுகளின் நாடிநரம்புகள், ஒரே நிமிடத்தில் அறுத்தெறியப்பட்டுள்ளது.. வீடே அதிரும்படியான அந்த மழலைகளின் சிரிப்பு சத்தம், ஒரே நிமிடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது.. நேற்று முதல் இயல்புக்கு திரும்ப முடியாமல் அதிர்ச்சியில் தத்தளித்து கிடக்கிறது உத்தரபிரதேசம். அப்படி என்ன நடந்தது?

படவுன் என்ற பகுதியை சேர்ந்தவர் சஜித் கான்.. அங்குள்ள சாய்பாபா காலனியில் சொந்தமாக ஒரு சலூன் கடையை வைத்து நடத்தி வருகிறார். சஜித்தின் சலூன் கடைக்கு பக்கத்திலேயே வினோத் என்பவர் வசித்து வருகிறார். மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வினோத் வசித்து வந்துள்ளார்.

Do you know Who is this Uttar pradesh Vinoth and Did Hindu Muslim Friendship with 2 children

நெருங்கிய நட்பு: வினோத்தும், சஜித்தும் நீண்ட கால நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. சஜித்தின் சலூன் கடைக்கு, எதிரிலேயே வினோத் வீடு இருந்துள்ளது.. எதிர் எதிரே இருப்பதால், இவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

தன்னுடைய சகோதரர் ஜாவத்தை அழைத்துக்கொண்டு இரவு, வினோத் வீட்டுக்கு சென்றுள்ளார் சஜித்.. தன்னுடைய மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் செலவுக்கு ரூ.5,000 பணம் வேண்டும் என்று வினோத் மனைவியிடம் கேட்டாராம்..

பியூட்டி பார்லர்: வினோத் மனைவியும் பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள்ளே சென்றபோது, டீ போட்டு தரும்படி சொன்னாராம். உடனே டீ போடுவதற்காக வினோத் மனைவி கிச்சனுக்கு சென்றுள்ளார். அப்போது சஜித், எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, வீட்டு மாடியில் கொஞ்சம் நடந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, மாடிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது, சஜித் தன்னுடன் வினோத்தின் 3 மகன்களையும் மாடிக்கு அழைத்து சென்றாராம். அப்போது, வினோத்தின் மூத்த மகனான ஆயுஷிடம், "மாடியில் இருக்கும் உன் அம்மாவின் பியூட்டி பார்லரை காட்டு" என்றாராம்.

திடீர் கொலை: உடனே ஆயுஷூம், சஜித்தை அழைத்துக்கொண்டு 2 வது மாடிக்கு சென்றுள்ளான்.. அப்போது திடீரென அந்த ரூமிலிருந்த விளக்குகளை அணைத்த சாஜித், ஆயுஷை சவரக்கத்தியால் குத்தி கிழித்துள்ளார்..

சஜித் ஆயுஷின் சவரக் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டிருந்தபோது, ஆயுஷின் தம்பி ஆஹான், 2வது மாடிக்கு ஓடிவந்துள்ளான்.. ஆஹானையும் அதே கத்தியால் குத்தியுள்ளார் சஜித்.. வினோத்தின் இன்னொரு மகனான பியூஷ் மட்டும், படுகாயங்களுடன் தப்பியோடி மறைந்துகொள்ள, 11 வயதான ஆயூஷ், 7 வயதான ஆஹான் என்ற இரு குழந்தைகளுமே அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். 3 குழந்தைகளையுமே கத்தியால் குத்திய சஜித், வெளியில் பைக்கில் காத்திருந்த அவரது தம்பி ஜாவேத்துடன் தப்பி ஓடிவிட்டாராம்.

கொடூர கொலை: கண்ணிமைக்கும் நேரத்தில் இது அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது.. போலீசாருக்கு தகவல் தரப்பட்டதையடுத்து, தப்பியோடிய சஜித்தை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் முயன்றனர்.

ஆனால், போலீசார் மீதே துப்பாக்கி சூடு நடத்த முயன்றுள்ளார் சஜித். இதனால் என்கவுன்டரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நடந்த கொலைகளால் உத்தரபிரதேசம் நடுங்கி கொண்டிருக்கிறது. சஜித்தின் தம்பி தப்பியுள்ள நிலையில், அவரையும் கைது செய்யும்படி பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.

விசாரணை தீவிரம்: எனினும், இந்த கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை போலீசார் உறுதியாக சொல்லவில்லை. ஆனால், இது தொடர்பான பல்வேறு தகவல்கள் சாய்பாபா காலனியிலிருந்து வெடித்து கிளம்பி கொண்டிருக்கின்றன.

வெறும் 5 ரூபாய் பணத்தை கேட்டதால் மட்டுமே இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. காரணம், வினோத் - மற்றும் சஜித்கானுக்கு ஏற்கனவே முன்பகை இருந்து வந்த நிலையில், வினோத்குமார் மனைவி, சலூன் கடையை நடத்தி வந்ததும், சஜித்கானுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட காரணமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

வினோத்: ஆனால், வினோத்துக்கும் சஜித்துக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை என்கிறார்கள் போலீசார்.. தங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை என்று வினோத்தும் போலீசில் சொல்லி உள்ளாராம். அப்படியிருந்தும், வினோத் வீட்டில் இல்லாத நேரத்தை அறிந்தே, சஜித்தும் ஜாவத்தும் இந்த கொலைகளை செய்துள்ளது ஏன் என்பதுதான் போலீசாரின் குழப்பமாக உள்ளது.

உயிரிழந்த பிஞ்சுகளின் உடலை எடுக்க விடாமல், ஆவேசத்தின் உச்சத்தில் மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள்.. போலீசாரின் எந்த பேச்சுவார்த்தையும் அவர்களின் காதில் விழவில்லை.

தாக்குதல்கள்: மற்றொருபக்கம், இந்த சம்பவம் மத ரீதியான தாக்குதலையும் கிளப்பிவிட்டு வருகிறது.. "இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் என்றால், ஒட்டுமொத்த பேரும் இந்துக்களை விமர்சிக்கிறார்களே, இப்போது இந்த இரட்டை கொலைக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?" என்ற கேள்வி ட்விட்டரில் கொதிப்பை தந்து வருகிறது.

உண்மையிலேயே, இந்த கொலைக்கு காரணம் முன்விரோதமா? மதரீதியான அதிருப்தியா? என்று தெரியவில்லை.
காரணம் எதுவாக இருந்தாலும்சரி, எந்த ஒரு உயிரையும் கொல்ல யாருக்குமே உரிமை இல்லாதபோது, உலகமே தெரியாத 2 பிஞ்சுக்களின் உயிர்கள் இன்று அநியாயமாக பறிபோயிருக்கிறது. நேற்று இந்நேரம், ஓடியாடி விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், பரலோகம் போய் சேர்ந்துள்ளன..

நியாயம்: எந்த ஒரு அநியாயத்துக்குமே ஒரு முடிவு உண்டு... அந்தவகையில், வினோத்தின் குழந்தைகளை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+