சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர் தலைமறைவு
ஹைதராபாத்: ஆந்திராவில் டாக்டர் ஒருவர், சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பாரிகி நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அப்பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் நரேந்திரன் என்பவரிடம் சிகிச்சக்காக அழைத்துச் சென்ற போது, மருத்துவமனையில் ஓரிரவு தங்கி சிகிச்சை பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்று டாக்டர் கூறியுள்ளார். இதை நம்பி தங்கிய அந்த பெண்ணுக்கு மயக்க மாத்திரையை போட்டுக் கொடுத்து டாக்டர் பலாத்காரம் செய்துவிட்டார்.
மயக்கம் தெளிந்த அந்த இளம்பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து டாக்டரிடம் தகராறு செய்தார். அப்போது, விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்று விடுவேன் என்று நரேந்திரன் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துப் போன அந்தப் பெண் அன்றிரவு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.
இந்நிலையில், அவருக்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர், சமீபத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு மறுநாளே, மீண்டும் வயிற்று வலி அதிகமாகவே, வேறொரு டாக்டரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அந்த பெண் கர்ப்பமடைந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
‘நேற்று தான் திருமணம் ஆனது, அதற்குள் கர்ப்பமா? என்று மணமகன் வீட்டார் வாயடைத்து போயினர். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோருக்கு அவர்கள் தகவல் அளிக்கவே, விரைந்து வந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று இரவு டாக்டர் நரேந்திரனால் பலாத்காரம் செய்யப்பட்டதையும், டாக்டரின் மிரட்டலுக்கு பயந்து உண்மையை மறைத்து விட்ட தகவலையும் அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதேசமயம் கிளினிக்கை மூடி விட்டு டாக்டர் நரேந்திரன் தலைமறைவாகிவிட்டார். புகாரின் பேரில் தலைமறைவான டாக்டர் நரேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications