பைல்ஸ் நோய் சிசிக்சைக்கு வந்த பெண்... அசிங்கமாக தொட்ட டாக்டருக்கு எரவாடா சிறை
புனே: டாக்டரிடம் போனால் நோயின் தன்மைக்கு ஏற்ப பரிசோதனை செய்வார்கள், ஊசி போட்டு மாத்திரை கொடுப்பார்கள். ஆனால் புனே அருகே ஒரு டாக்டர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் மார்பை தொட்டு பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். சாதியை கேட்டதோடு தொடர்ந்து அசிங்கமான முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். புகாரிடன் பேரில் அந்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளியிடம் அத்து மீறிய அந்த டாக்டர் இப்போது எரவாடா சிறையில் களி சாப்பிடுகிறார்.
நோயாளியிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டரின் பெயர் அமித்காந்தி என்பதாகும். இவர் சுக்ரவார்பேத் பகுதியில் கிளினிக் வைத்திருக்கிறார். நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு பெண் பொறியாளர் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்டெத்தஸ்கோப் வைத்து அந்த பெண்ணை பரிசோதித்தார். பைல்ஸ் வந்திருப்பதாக கூறியதற்கு அந்த இடத்தை காட்டு என்று கூறி பிற நோயாளிகள் முன்பே தொடக்கூடாத இடத்தில் தொட்டு சீண்டினாராம்.

முதலில் அந்த பெண்ணை தனியாக பரிசோதித்த அமித்காந்தி, பின்னர் ஆண் நோயாளிகள் வந்த பின்னரும் தனது பரிசோதனையை நிறுத்தவில்லை. இதனால் அதிகம் பாதிப்புக்கு ஆளானதாக அந்த பெண் கூறியுள்ளார்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அந்த பெண், நேராக கடாக் காவல்நிலையத்திற்கு சென்று டாக்டர் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டாக்டரை கைது செய்தனர். பைல்ஸ் பிரச்சினைக்கு போன தன்னிடம் மார்பை பிடித்து அத்துமீறினார் அது தேவையே இல்லை என்றும் புகாரில் கூறியுள்ளார்.
டாக்டர் மீது பாலியல் சீண்டல் வழக்கில் எப்ஐஆர் போட்ட போலீசார், நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து எரவாடா சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார்.
டாக்டருக்கு ஆதரவாக பேசியுள்ள அவரின் மனைவி, நாங்கள் நோயாளியின் நோய்க்குத்தான் சிகிச்சை அளிப்போமே தவிர தவறாக நடந்து கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார். சாதியை கேட்டு சிகிச்சை அளிப்பது இல்லை. ஒரு டாக்டர் என் கேள்விகளை கேட்க வேண்டுமோ அதைத்தான் என் கணவர் கேட்டார், அந்தரங்கமான பகுதிகளை தொடவே, அதுபோன்ற கேள்விகளை கேட்கவோ இல்லை என்றும் டாக்டரின் மனைவி கூறியுள்ளார்.
பெண் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு சரியாக விசாரணை நடத்தாமல் எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்திருள்ளது வேதனை தருவதாகவும் கூறியுள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications