வரதட்சணைக் கொடுமை... விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் கணவர்!
கொல்கத்தா : வரதட்சணைக் கொடுமை செய்வதாக போலீசில் மனைவி புகார் அளித்ததால், மேற்கு வங்கத்தில் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வருவது வழக்கம். ஆனால், இவற்றில் இருந்து வேறுபட்டு வரதட்சணைக் கொடுமை காரணமாக மேற்கு வங்கத்தில் ஆண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்தீப் (33). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் கணவர் வீட்டார் தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக சுப்தீப்பின் மனைவி போலீசில் புகார் அளித்தார். மனைவியின் புகார் தொடர்பாக தகவலறிந்த சுப்தீப், போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இன்று காலை தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சுப்தீப்பின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications