சினிமா பாணியில்.. ஒடிசா ஹோட்டலில் விழுந்து இறந்த "கோடீஸ்வர" ரஷ்ய எம்பி! சாம்பிள் எங்கே? ஒரே குழப்பம்
புவனேஷ்வர்: ரஷ்யாவை சேர்ந்த எம்பி பாவெல் ஆன்டோவ் இந்தியாவில் பலியான நிலையில் அவரின் உடல் உறுப்பு சாம்பிள்கள் சேமித்து வைக்கப்படாத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,
ரஷ்யாவை சேர்ந்த எம்பி பாவெல் ஆன்டோவும் அவருடைய நண்பரும் வெறும் இரண்டு நாட்கள் இடைவெளியில் இந்தியாவில் மரணம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஹிட் ஜாப்பாக இருக்குமோ என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய எம்பி பாவெல் ஆன்டோவின் நண்பர் விளாடிமிர் பிடெநோவ் கடந்த 22ம் தேதி தனது அறையில் மர்மமான முறையில் பலியாகி கிடந்தார். இவர்கள் இருவரும் ஒடிசாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேறு வேறு அறையில் தங்கி இருந்தனர்.

ஹோட்டல்
இவரின் உடலுக்கு அருகே சில மது பாட்டில்கள் இருந்தன. உடலில் பெரிதாக காயம் எதுவும் இன்றி அவர் பலியாகி கிடந்தார். இதையடுத்து அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் தங்கி இருந்த அதே ஹோட்டலில்தான் ரஷ்ய எம்பி பாவெல் ஆன்டோ தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலையில் அவரின் உடல் ஹோட்டலுக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. ரத்தம் மிதக்க அவரின் உடல் அங்கே தலை உடைந்து கிடந்தது.

மரணம்
3வது மாடியில் இருந்த ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ அங்கிருந்து விழுந்து பலியாகி உள்ளார். இவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நண்பரின் மரணம் காரணமாக மன அழுத்தத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாம். ஏனென்றால் ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ அதிபர் புடினுக்கு எதிராக தீவிரமாக பேசி வந்தார். புடினை பல இடங்களில் இவர் விமர்சனம் செய்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததே தவறு என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் ரஷ்ய எம்பி பாவெல் ஆண்டோ மரணம் அடைந்த சம்பவம் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சாம்பிள்
இந்த நிலையில் இருவரும் மரணம் குறித்து விசாரணை நடத்த ஒடிசா கிரைம் பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று ரஷ்யா எம்பியின் ஆன்டோவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் அவரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாடியில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரின் உள் உறுப்புகள் கடுமையாக காயம் அடைந்து இருக்கின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை
இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்ததும், அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பொதுவாக இது போன்ற மரணங்களில் எதிர்கால விசாரணைக்காக Viscera சாம்பிள் எடுத்து வைக்கப்படும். அதாவது உடல் உறுப்பு சாம்பிள். உடலில் இருக்கும் இதயம், லிவர் , குடல், நுரையீரல், கிட்னி போன்ற உறுப்புக்களின் சாம்பிள் எடுத்து வைக்கப்படும். ஒருவேளை எதிர்காலத்தில் சந்தேகம் வந்தால் விசாரணை செய்ய வசதியாக மருத்துவர்கள் இந்த சாம்பிள்களை எடுத்து வைப்பார்கள். அதிலும் இது போன்ற மோசமான மரணங்களில் Viscera சாம்பிள் மிக முக்கியம்.

என்ன நடந்தது?
ஆனால் ஆன்டோவ் உடலின் Viscera சாம்பிள்கள் எடுத்து வைக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. போலீசார் கேட்கவில்லை என்பதால் இந்த சாம்பிள்களை எடுத்து வைக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய எம்பி மரணம் அடைந்ததே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசு இருக்குமோ என்ற கேள்வியும் கூட எழுந்துள்ளது. அப்படி இருக்கும் போது இவரின் உடல் உறுப்பு சாம்பிள்களை கூட மருத்துவர்கள் எடுத்து வைக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications