நாடே கவனிக்கும் தேர்தல்.. கொரோனா அச்சம் வேண்டாம்.. மக்கள் தைரியமாக வாக்களியுங்கள்.. மம்தா அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்,
மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா தங்கள் தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்துள்ளனர்.

மத்திய அரசு தோல்வி
இந்நிலையில் காணொலி வாயிலாக நேற்று பிரசார கூட்டத்தில் பேசிய திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, நான் தேர்தல் கூட்டங்களைவிட அதிகமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டங்களை நடத்துகிறேன். மத்திய அரசு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது. மத்திய அரசைத் துணிச்சலுடன் எதிர்க்க மேற்கு வங்கத்தால் மட்டுமே முடியும்.

பிரதமர் மோடி
ஒட்டுமொத்த நாடே இந்தத் தேர்தலைக் கவனித்து வருகிறது. பிரதமர் மோடி மன் கி பாத்தில் பேசுகிறார். வெறுமென பேசிவிட்டு, அவர் எங்கோ சென்றுவிடுகிறார். மேலும், மேற்கு வங்கத்திற்கு வர வேண்டிய ஆக்சிஜன் எல்லாம் உத்தரப் பிரதேச்திற்கு அனுப்பப்படுகிறது. சரியான நேரத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால், வைரஸ் மீண்டும் பரவியிருக்காது.

அச்சம் வேண்டாம்
உத்தரப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் எரிக்கப்படுகின்றனர். அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இதே நிலைதான். சொல்லப்போனால் மேற்கு வங்க மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும். இங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களியுங்கள், இது மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் என்று பேசினார்,
Recommended Video

கடும் கட்டுப்பாடுகள்
மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட கொரோனா விதிமுறைகளை எந்தக் கட்சியும் முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரசாரத்திற்குப் பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. அதன்படி வாகன பேரணி உள்ளிட்ட அனைத்து வித பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும் 500 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications