புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று திடீரென்று புழுதிப்புயல் ஏற்பட்டது. செல்போன் டவரை விட அதிக உயரத்துக்கு புழுதிகள் பறந்து வீடுகளை மூடியதால் பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் தவித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை பார்த்து பலரும் மிரண்டுப்போய் உள்ளனர்.

ஹாலிவுட் சினிமாக்களிலும், யூடியூப் வீடியோக்களிலும் நாம் புழுதி புயல் வீசுவதை பார்த்து இருப்போம். அமைதியாக இருக்கும் கிராமத்தில் திடீரென்று பலஅடி உயரத்துக்கு புழுதி புயல் நகர்ந்து வருவதை நாம் பார்த்து மிரண்டு இருப்போம்.

dust-storm-engulfs-parts-of-rajasthan

ஆனால் இன்று நம் நாட்டில் ராஜஸ்தானில் உண்மையிலேயே புழுதி புயல் வீசி உள்ளது. ராஜஸ்தானின் சில இடங்களில் இன்று பொதுமக்கள் புழுதி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதன்படி ராஜஸ்தானின் சுரு நகரில் இன்று திடீரென்று புழுதி புயல் தாக்கியது. செல்போன் டவரை விட உயரமாக புழுதிகள் பறந்து வந்து வீடுகளை மூடின. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து வீசிய புழுதி புயலால் பொதுமக்கள் தவித்தனர். அவர்கள் மூச்சு விட முடியாமலும், எதிரே வரும் நபர் தெரியாமலும் அவதிப்பட்டனர். அதேபோல் பீகானேர் பகுதியிலும் இன்று புழுதி புயல் வீசியது. அங்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த புழுதி புயல் வருவதை பார்த்து மார்க்கெட் உள்பட பல இடங்களில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து கொண்டு கடைக்குள் பதுங்கினர். அதேபோல் பொதுமக்களும் அலறியடித்து ஓடினர். புழுதி புயல் தணிந்த பிறகு அவர்கள் மீண்டும் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் மிரள வைத்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பல மாவட்டங்களில் மோசமான வானிலை நிலவி வருகிறது. கோடை மழை பெய்து வருவதோடு, பல இடங்களில் சூறைக்காற்று வீசி வருகிறது.

இந்த மோசமான வானிலையால் மாநில மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வார்னிங் கொடுத்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மையம் சார்பில் ''ராஜஸ்தானின் பிகானேர், ஜெய்ப்பூர், அஜ்மீர், பரத்பூர், கோட்டா, ஜோத்பூர் மற்றும் உதய்பூர் உள்ளிட்ட கோட்டங்களில் வழக்கத்தை விட இன்று காற்று அதிகமாக இருக்கும். மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 44°C-க்கு கீழ்தான் இருக்கும். இதனால் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பஅலை சற்று குறைவாக இருக்கும்

மாநிலத்தில் திடீர் திடீரென மாறும் வானிலையால் அடுத்த 5 நாட்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வந்தால் போதும். ''என கணிப்புடன் கூடிய அறிவுரையை வழங்கி உள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+