For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிகாலையில் நடந்த துயரம்..போர் விமானங்கள் விபத்து எப்படி நடந்தது? நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் இன்று காலை விபத்துக்குள்ளாகின.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின. இந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். ஒரு விமானி பலியானார். விமானங்கள் நடு வானில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நடைபெற்றதா? என்று விசாரணையை விமானப்படை தொடங்கியுள்ளது.

இந்திய விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வாடிக்கையாக ஒன்றாகும். அந்த வகையில் இன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற இரு போர் விமானங்களும் கிளம்பின.

இந்த இரு விமானங்களும் போரின் போது முன்களத்தில் பயன்படுத்தப் படக்கூடிய விமானங்கள் ஆகும். இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றாக சுகோய் -30 போர் விமானம் கருதப்படுகிறது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: ஒரு விமானி பலி, 2 பேர் படுகாயம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: ஒரு விமானி பலி, 2 பேர் படுகாயம்

இந்திய போர் விமானங்கள்

இந்திய போர் விமானங்கள்

ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட இந்த போர் விமானங்கள் பிரமோஸ் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டவையாக இந்த சுகோய் போர் விமானம் உள்ளது. அதேபோல மிராஜ் 2000 ரக விமானம் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டது ஆகும். 1985 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் மிராஜ் 2000 விமானங்கள் இணைக்கப்பட்டன. வஜ்ரா என்ற பெயர் இந்த போர் விமானத்திற்கு இந்திய விமானப்படை வைத்துள்ளத்து. கடந்த 38 ஆண்டுகளில் 13 மிராஜ் 2000 ரக விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

விமானங்கள் மோதிக்கொண்டதா?

விமானங்கள் மோதிக்கொண்டதா?

இந்த இரு விமானங்களும் இன்று அதிகாலை பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன. அப்போது அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேசத்தின் மொரேனே என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. நடு வானில் இரு விமானங்களும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நேரிட்டதா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் ஒரு விமானி பலியானார். இரண்டு விமானிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே

விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே

இரண்டு விமானங்களும் அதிவேகத்தில் சென்று பயிற்சியில் ஈடுபட்டதால் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல், அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்று இருப்பதால் அடர் பனிமூட்டமும் விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது தொடர்பாக விமானப்படை விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே அதிகாரப்பூர்வ விவரங்கள் கிடைக்கப் பெறும்.

நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

விமானம் விபத்துக்குள்ளானது பயங்கர சத்தம் கேட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீ பிழம்புகளுடன் விமானத்தில் சேத பாகங்கள் தரையை நோக்கி விழுந்தன. விமானத்த்தின் சேத பாகங்கள் 500 மீட்டர் முதல் 800 மீட்டர் தொலைவுக்கு சிதறிக் கிடந்தன. விமானத்தின் சேத பாகங்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் அங்கு கூடிய மக்கள் மணல்களை கொட்டி தீயை அணைக்க முயற்சித்தனர். விமானிகள் பாரசூட் மூலமாக வெளியே குதித்தனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து விமானிகள் தரையிறங்கியதை காண முடிந்தது. முட்புதர்களுக்குள் காயங்களுடன் விழுந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவர்களை மீட்டு கொண்டு சென்றது" என்றனர்.

English summary
Two Indian Air Force planes crashed in Madhya Pradesh. Two pilots survived the crash with injuries. One pilot was killed. Did the plane crash in mid-air? The Air Force has started an investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X