நிலநடுக்க அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மேற்கு வங்கத்தில் ஒருவர் பலி
கொல்கத்தா: நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.

இந்திய-மியான்மர் எல்லையை மையம் கொண்டு, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் மேற்கு வங்காள மாநிலத்திலும் உணரப்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் முர்ஷிதாபாத் மாவட்டம் கபஸ்தங்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதால் நவ்ஷாத் அலி (வயது 50) என்பவர் பலியானார்.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் தரையில் சுருண்டு விழுந்த நவ்ஷாத் அலியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தன். கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடுங்குளிரில் நடுங்கியபடி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications