இமாசலப் பிரதேசத்தில் இன்றும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.4 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாசலப் பிரதேசத்தில் இன்று பிற்பகலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய அபாய பகுதிகள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மியான்மரை மையமாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது இமயமலை பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன.

Earthquake tremors with magnitude 4.4 in Himachal

இதனைத் தொடர்ந்து நேற்று 3 முறை அடுத்தடுத்து இமாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் குஜராத் மாநிலத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.49 மணியளவில் இமாசலப் பிரதேசத்தின் சாம்பா பகுதி மீண்டும் நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. இது ரிக்டரில் 4.4 அலகுகளாகப் பதிவாகி இருந்தன. இதுவரை சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+