டெல்லியில் பதிவான வாக்கு சதவீதம்- அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தேர்தல் ஆணையத்தால் சர்ச்சை
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது கடும் சர்ச்சையாகி உள்ளது.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

காலை முதலே டெல்லியில் மிக மிக மோசமான வாக்குப் பதிவுதான் இருந்தது. பிற்பகலில் இது கணிசமானக உயர்ந்தது. மாலை 6 மணி நிலவரப்படி சுமார் 60%க்கும் குறைவாக வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அன்று இரவே அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால் டெல்லியில் தற்போது வரை எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் கடும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வெளியான அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளும் சொல்லி வைத்தாற் போல் ஆம் ஆத்மியே பிரமாண்ட வெற்றியை பெறும் என கணித்திருக்கின்றன.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மொத்தம் பதிவான வாக்குகள் சதவீதத்தை அறிவிக்காதது ஏன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications