துக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
Recommended Video
நார்கண்ட்: கர்நாடகாவில் துக்க வீட்டில் அழுது கொண்டிருந்தவரை குரங்கு ஒன்று சமாதானப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குரங்குகள் என்றாலே அதனுடைய சேட்டைகள், நாம் வைத்திருக்கும் தின்பண்டங்களை அபகரிப்பது, நம்மை போலவே நடித்து காட்டுவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தான் நினைவில் வரும்.
ஆனால் கர்நாடகாவில் உள்ள குரங்கு ஒன்றின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. நார்கண்ட்டில் உடல்நலக்குறைவால் முதியவர் ஒருவர் மரணித்ததை எண்ணி, உறவினர்களும் ஊர் பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தனர்.

இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து துக்க வீட்டிற்கு வந்த அனைவரும் கதறி அழுதனர். அப்போது அங்கு வந்த குரங்கு, ஒன்று அழுது கொண்டிருந்த பெண் ஒருவரது அருகே சென்று அவரது தோளில் கை வைத்து, தலையை வருடி, அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியுள்ளது. மேலும் அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து நெகிழ வைத்தது.
இது குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்ட போது, இந்த குரங்கு எல்லா துக்க வீடுகளுக்கும் சென்று ஆறுதல் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளது என கூறினர். இதனால் அக்குரங்கு தங்களில் ஒருவராகவே மாறிவிட்டதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

மிருகங்களுக்கு நம்மை போன்ற உணர்வு இல்லையென்று யார் சொன்னது. மனிதர்களின் உணர்வுகள் புரிந்திருப்பதால் தானே இந்த குரங்கால் துக்க வீடுகளுக்கு சென்று மனிதர்களை போல ஆறுதல் கூற முடிந்திருக்கிறது. துக்க வீட்டில் குரங்கு ஆறுதல் சொல்லும் வீடியோவை பார்த்த பலரும் அதன் மனிதாபிமானத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications