இனி எல்லாம் மக்களின் கையில்! கோவிலில் தீவிரமாக வழிபட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்.. என்ன சொன்னார்?
குருத்வார்: தேர்தலுக்கு முன்பு பஞ்சாப் குருத்வாரில் உள்ள காரர் பகுதி ஸ்ரீகடல்கார்க் சாகிப் கோயிலில் முதல்வர் சரண்ஜித் சன்னி பிரார்த்தனை செய்தார். ‛‛தேர்தலில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம். இனி தேர்தல் முடிவு மக்களின் கையில் தான் உள்ளது'' எனக்கூறினார்.
பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இதில் 1304 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மொத்தம் 2.14 கோடி மக்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இன்று ஒரேகட்டமாக 117 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரார்த்தனை
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக இன்று காலை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குருத்வாரிலல் உள்ள காரர் ஸ்ரீகடல்கர்க் சாகிப் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அவருடன் ஆதரவாளர்கள் இருந்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை நிருபர்கள் சூழ்ந்தனர். நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முடிவு மக்கள் கையில்
‛‛பஞ்சாப்பில் நான் குறுகிய காலம் முதல்வராக இருந்தேன். இதில் அதிக திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம். முடிவு என்பது மக்களின் கையில் தான் உள்ளது'' என்றார். மேலும் பிரார்த்தனை பற்றி கேட்டதற்கு, ‛‛பஞ்சாப், மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்'' என்றார்.

2 தொகுதியில் முதல்வர்
முதல்வர் வேட்பாளரான சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப், பதவூர் என தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நிலவியது. காங்கிரஸ் தலைவராக உள்ள நவ்ஜோத் சிங் சித்துவா, இல்லை தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியா என்ற கேள்வி எழுந்தது. இதில் காங்கிரஸ் மேலிடம் சரண்ஜித் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறவித்தது. இதில் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி அடைந்தார். இதையடுத்து பிரசாரத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்த நவ்ஜோத் சிங் சித்து இறுதிக்கட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மும்முனை போட்டி
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி(எஸ்) கட்சிகள் உள்ளன.

அனல் பறந்த பிரசாரம்
தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசினர். ஆம்ஆத்மி கெஜ்ரிவால் பஞ்சாப்பை சிதைக்க நினைக்கிறார் என காங்கிரஸ், பாஜகவும், மத்தியில் ஏமாற்றி ஆட்சியை பிடித்த பாஜக பஞ்சாப் மக்களையும் ஏமாற்ற முயற்சிப்பாக காங்கிரஸ் ஆம்ஆத்மி கட்சியும் குற்றம்சாட்டின. இதேபோல் மக்களுக்கு செவிகொடுக்காமல் உள்ள காங்கிரஸ் கட்சி, 5 ஆண்டில் நலத்திட்ட பணிகளை பஞ்சாப்பில் மேற்கொள்ளவில்லை என பாஜக, ஆம்ஆத்மி கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதனால் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. இன்றைய ஓட்டுப்பதிவில் பதிவாகும் ஓட்டுகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications