பாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்! வைரல் வீடியோ
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி பரிமல் நாத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் முகாமில் அடைக்கப்பட்ட குட்டி யானை ஒன்று தனது பாகனை கொஞ்சுவதற்காக தடுப்புகளை தாண்டி விளையாடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தில் உள்ள சியாங் மாயில் உள்ள மோ சா யானைகள் முகாமில் இருபது வயது மதிக்கத்தக்க குட்டி யானை தனது பராமரிப்பாளரை அரவணைத்து கொஞ்சுவதற்கும் ஆசைப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில். 2வயது யானை முகாமிற்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது. அதனை சுற்றிலும் தடுப்பு கம்பி போடப்பட்டு உள்ளது. குட்டி யானையை பராமரித்து வரும் பாகன், யானை அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளுக்கு பெயின்ட் அடித்து கொண்டுள்ளார்..
அப்போது யானை குட்டி, தனது பராமரிப்பாளரை தடுப்புக்குள் துதிக்கையை நுழைத்து அரவணைத்துக் கொள்ள வருமாறு அழைக்கிறது. அதை. அவர் கவனிக்கவில்லை. இரண்டு மூன்று முறை முயன்ற யானை இறுதியில் தடுப்பில் தனது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி வைத்து குதிக்க முயற்சிக்கிறது. அதனை உணர்ந்த பாகன் உடனே யானையின் அன்பை ஏற்று கொஞ்சுகிறார். இந்தக் குட்டி யானைக்கும் பாகனுக்கும் இடையே உள்ள இந்த பாசமழை வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
அப்படித்தான் ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நாத்வானி பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில் யானைக்குட்டியின் விளையாட்டுத்தனம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மனிதனுக்கும் விலங்குக்குமான சிறந்த வாழ்விற்கு இது ஒரு உதாரணம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் விலங்குகள் கடவுள் கொடுத்த அற்புதம் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications