For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனநாயகத்தை நசுக்கிய எமர்ஜென்சி இந்தியாவின் இருண்டகாலம்..: மோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது ஜனநாயகத்தை நசுக்கிய செயல்; இந்தியாவின் இருண்டகாலம் அது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்தார். இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு அடைகிறது.

Emergency was India's darkest period: PM Modi

இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

1975-ல் இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர நிலை பிரகடனம் நமது ஜனநாயகத்தை நசுக்கி விட்டது. அது இந்தியாவின் இருண்ட காலம். அதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

அவர்களது நன் முயற்சியால் நமது ஜனநாயகத்தின் தன்மை சிதையாமல் பேணப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் ஜனநாயகத்தை சீர்தூக்க ஆண்களும், பெண்களும் தன்னலமற்று ஆர்வத்துடன் இணைந்து போராடினர்.

ஒரு இளைஞராக நெருக்கடி நிலை எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து பலவற்றை கற்றுக்கொண்டேன். ஜனநாயகத்தை மீ்ட்கவேண்டும் என்ற ஒரேநோக்குடன் போராடிய தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற நெருக்கடி நிலையானது பிரகடனம் உதவியது.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிப்பது, துடிப்பு மிக்க ஜனநாயகம்தான். எனவே, ஜனநாயக கொள்கைகளையும், மரபையும் வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

English summary
On the occasion of the 40th anniversary of the Emergency on Thursday, Prime Minister Narendra Modi took to Twitter and said a vibrant liberal democracy is the key to progress. The PM described the Emergency as India's darkest period, when the then political leadership trampled over the democracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X