'எம்புரான்' சினிமா சர்ச்சை: என் மகனை பலிகடாவாக்கும் மோகன்லால்.. பிருத்விராஜ் தாயார் செம்ம கோபம்!
திருவனந்தபுரம்: எம்புரான் லூசிஃபர் திரைப்படமான பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிரது. எம்புரான் திரைப்படத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்படும் நிலையில் நடிகர் மோகன்லால் மீது, இயக்குநர் பிருத்விராஜின் தாயார் பகிரங்க புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைபடம் பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்து லூசிஃபர் பார்ட் 2, எம்புரான் என்ற பெயரில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

எம்புரான் திரைப்பட காட்சிகளுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் போர்க்கொடி தூக்கி தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசோ, எம்புரான் திரைப்படம் அற்புதமான துணிச்சலாக எடுக்கப்பட்ட படம் என பாராட்டித் தள்ளுகிறது.
எம்புரான் திரைபப்டனின் மெயின் வில்லன் பால்ராஜ் பட்டேல் என்கிற பாபு பஜ்ரங்கி. 2002-ம் ஆண்டு வட இந்தியாவில் இஸ்லாமியர்களை, மதவெறியால் வேட்டையாடிய கொடூரன். இந்த கொடூர வில்லனே, கேரளா அரசியலில் ஊடுருவுகிறான். அவன் வீழ்த்தப்படுவதுதான் கதை.
ஆனால் 2002-ம் ஆண்டு குஜராத்தில் மதவெறியர்கள் நிகழ்த்திய இனப்படுகொலையை நினைவூட்டுகிறவையாகவே எம்புரான் பட காட்சிகள் இருக்கின்றன என்பது விமர்சனம். அதிலும் குஜராத் இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பெயரும் பாபா பஜ்ரங்கி; அவரது முழுமையான பெயர் பாபு பட்டேல். இதனால் அவரை மையமாக வைத்தே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் சர்ச்சையை கிளப்பிவிட்டன.
இதனால் தற்போது எம்புரான் திரைப்படத்தில் 17 இடங்களில் எடிட் செய்யப்பட்டுள்ளன. மேலும் 3 நிமிட காட்சிகள் முழுமையாகவும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த சர்ச்சை தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த, மோகன்லால் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் மோகன்லாலின் கருத்துகள் தமது மகன் பிருத்விராஜை பலிகடாவாக்க்வதாக இருக்கிறது என அவரது தாயார் குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் எம்புரான் திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் மோகன்லாலுக்கு நன்றாக தெரிந்தும் என் மகனே பொறுப்பு என்பதாக மோகன்லால் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் பிருத்விராஜ் தாயார் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications