விஜய் மல்லையாவின் ரூ.6630 கோடி சொத்து முடக்கம்…. அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவின் 6630 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.
கோடிக்கணக்கிலான பணத்தை வங்கியில் இருந்து கடனாக பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காமல் லண்டனில் ஓடி ஒளிந்து கொண்ட விஜய் மல்லையாவின் சுமார் 6630 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் நிறுவனத்திற்கு 2005ம் ஆண்டில் இருந்து 2010ம் ஆண்டு வரையில் பல வங்கிகள் கோடிக் கணக்கில் பணத்தை கடனாக அள்ளிக் கொடுத்துள்ளன. இந்தக் கடன்களை 2009ம் ஆண்டில் இருந்து கிங்பிஷர் நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.
இதனையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விஜய் மல்லையாவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications