''லூஸாப்பா நீ''.. பவார் கருத்து குறித்து மகள் சுப்ரியா 'அப்செட்'!
புனே: இரண்டு முறை ஓட்டுப் போடுமாறு தனது தந்தை சரத் பவார் கூறியிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் அவரது மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே.
சில நேரங்களில் ஜோக்குகள், கடும் பாதிப்பை தேர்தல் சமயத்தில் ஏற்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
44 வயதான சுப்ரியா சுலே, தனது தந்தையின் பேச்சை ஜோக் என்று மறைமுகமாக விமர்சித்து தந்தையின் பேச்சு தவறு என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுகுறித்து சுப்ரியா தெரிவித்துள்ள கருத்துக்கள்...

அப்பா சும்மாதான் அப்படிக் கூறினார்
அப்பா நவிமும்பையில் நடந்த கூட்டத்தின்போது பேசியது சும்மா வேடிக்கைகாகத்தான்.

ஆனால் அது துரதிர்ஷ்டவசமானது
ஆனால் அப்படிப் பேசியது துரதிர்ஷ்டவசமானது. அது எனக்கும் கூட வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

ஜோக்குகள் கவிழ்த்து விடும்
சில நேரங்களில் இப்படிப்பட்ட ஜோக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இது நான் கற்றுக் கொண்ட பாடம் என்றார் சுப்ரியா.

என்ன சொன்னார் பவார்
பவார் மும்பையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், முதலில் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தில் வாக்களியுங்கள். பின்னர் விரலில் இடப்படும் மையை அழித்து விட்டு மறுபடியும் வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார். இதற்காக அவர் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications