இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஆய்வில் திடுக் தகவல்
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான 'க்ரை' நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

500% அதிகரிப்பு
இதில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 2006-ம் ஆண்டு 18,967 என இருந்த மேற்படி குற்ற செயல்கள், கடந்த 2016-ல் 1,06,958 என அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு
கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறுமி
அந்தவகையில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாவதும் இந்த ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்கள்
இதேபோல் குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி க்ரை அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications