ஹெச். எல். தத்துவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி?
டெல்லி: தேசிய மனித உரிமை ஆணைய புதிய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹெச். எல்..தத்து நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் குழுவின் உறுப்பினர்களான மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றி கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்ற எச்.எல். தத்துவின் பெயரை தேர்வுக் குழு இறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, அவரது பெயரை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தேர்வுக் குழு அனுப்பி வைத்தது.
இதற்கு ஒப்புதல் தெரிவித்து ஆணையத்தின் புதிய தலைவராக தத்துவை நியமிக்கும் ஆணையை குடியரசுத் தலைவர் விரைவில் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு சில மாதங்கள் அந்த பதவி காலியாக இருந்தது.
இதையடுத்தி ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக பணியாற்றும்படி அதன் உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிரியாக் ஜோசஃப் கேட்டுக் கொள்ளப்பட்டார்.. இந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தத்துவின் பெயரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications