கேரள கவர்னராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமனம்.. நோட்டாவை அறிமுகப்படுத்தியவர்!
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியான தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய கவர்னர்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர். அந்தவகையில் கேரள கவர்னரான ஷீலா தீட்சித் கடந்த செவ்வாய்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றைய தினமே ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமித்தது.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நேற்று நியமிக்கப்பட்டார். விரைவில் அவர் கேரள கவர்னராக பதவி ஏற்க இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்காரர்...
கேரள கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் 65 வயதான நீதிபதி பி.சதாசிவம், கடந்த 1949-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பழனிச்சாமி கவுண்டர், தாயார் பெயர் நாச்சாயம்மாள்.

கல்வி...
மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை தொடங்கிய சதாசிவம், சிவகாசியில் உள்ள அய்ய நாடார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் சென்னை அரசினர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து சென்னை ஹைகோர்ட்டில் அரசு வக்கீலாக பொறுப்பேற்றார்.

ஹைகோர்ட் நிரந்தர நீதிபதி...
1973-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் அரசு வக்கீலாக இருந்த சதாசிவம், இவருடைய உண்மையான உழைப்பு, நேர்மையான செயல்களால் ஹைகோர்ட் நிரந்தர நீதிபதியாக கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி...
கடந்த 2007-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் நீதிபதியாக சண்டிகார் ஹைகோர்ட்டில் பொறுப்பு ஏற்ற சதாசிவம், 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஆனார்.

ஓய்வு...
பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் 40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். கடந்த ஏப்ரல் 26-ந் தேதி அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

குடும்பம்...
நீதிபதி பி.சதாசிவத்துக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சீனிவாசன், செந்தில் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் சீனிவாசன் கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு முடித்து கோவையில் தொழில் செய்து வருகிறார். 2-வது மகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு விவசாயத்தை கவனித்து வருகிறார்.

முக்கியத் தீர்ப்புகள்...
பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான சதாசிவம், தனது பதவிக்காலத்தில் பல முக்கியமான வழக்குகளில் முக்கியத் தீர்ப்புகள், உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தேவேந்தர் பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனையை உறுதி செய்தது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டாவை இணைக்க உத்தரவிட்டது உள்ளிட்டவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications