இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

எக்சிட் போல்லாம் சும்மா பொழுதுபோக்கு.. வீக் எண்டை கொண்டாடுங்க.. சித்தராமையா ஜாலி டிவிட்

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  பெங்களூர்: தேர்தலுக்கு பின் நடத்தப்படும் கருத்து கணிப்புகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கு, தொண்டர்கள் யாரும் அதை பார்த்து கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டிவிட் செய்துள்ளார்.

  கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 8ல் 6 கருத்து கணிப்புகளில் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு கருத்து கணிப்பில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  Exit opinion polls are entertainment, Enjoy the weekend says, Siddaramaiah

  கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.இதில் பாஜக கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து டிவிட் செய்துள்ள சித்தராமையா ''இன்னும் இரண்டு நாட்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நல்ல பொழுதுபோக்கை கொடுக்கும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்புவது எல்லாம், ஒரு ஆற்றின் சராசரி ஆழம் 4 என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும். 6 அடி+ 4அடி + 2அடி இருந்தால் மட்டுமே சராசரியாக 4 அடி ஆழம் இருக்கும். இதனால் 6 அடி ஆழம் ஆற்றில் வரும் போது, நீரில் மூழ்க வேண்டியதுதான்'' என்றுள்ளார்.

  மேலும் ''ஆகவே கட்சியில் இருக்கும் அன்பானவர்களே, நலம் விரும்பிகளே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து கவலைப்படாதீர்கள், சந்தோசமாக வார இறுதியை கொண்டாடுங்கள். நாம் தான் மீண்டும் வருகிறோம்'' என்றுள்ளார்.

  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சாதகமாக இல்லை என்றாலும் சித்தராமையா சந்தோசமாக, அமைதியாக இருப்பது கட்சியினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka Exit Polls 2018: Siddaramaiah ''Exit opinion polls are entertainment for the next 2 daysRelying on poll of polls is like a person who can’t swim crossing a river on foot relying on a statistician who told him the average depth of the river is 4 feetPlease note average of 6+4+2 is 4. At 6 feet you drown! So, Dear party workers, supporters & well wishers, don’t worry about exit polls. Relax & enjoy your weekend. We are coming back.'' tweeted.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more