நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட கேரள இளைஞர்... பலாத்கார வழக்கில் கைது
கோழிகோடு: கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்ட இளைஞர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்குத் தொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த இளைஞர் ஷமீர்( 29). சமீபத்தில் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நண்பர்கள் பார்ப்பதற்காக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் ஷமீர்.
பேஸ்புக்கில் ஷமீரின் புகைப்படங்களைப் பார்த்து அவரது முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரில், ‘ஷமீர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் வாக்குறுதி அளித்தார். பல்வேறு இடங்களுக்கு நாங்கள் இருவரும் இணைந்து சுற்றினோம். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் படி பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷமீரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications