‘தமிழர்கள் படுகொலை திட்டமிடப்பட்டது’... திருப்பதி முன்னாள் எம்.பி. பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட போலி என்கவுண்டர் என திருப்பதி முன்னாள் எம்.பி. சிந்தாமோகன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி வனப்பகுதியில் நேற்று அதிகாலை 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களை கடத்தியதாகவும், தங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழக தொழிலாளர்களைக் கைது செய்யாமல், துப்பாக்கியால் சுட்டது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Fake encounter: Former Congress MP Chinta Mohan

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி சிந்தாமோகன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திருப்பதி வனப்பகுதியில் நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நடந்த சம்பவத்தை பார்க்கும்போது இது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று திருப்பதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் இருக்கும்போதே இந்த கொலையை நடத்தி, சாப்பிடுவதற்கே வழியே இல்லாத அப்பாவி கூலிதொழிலாளர்கள் 20 பேரை திட்டமிட்டு பிடித்துவைத்து கொலை செய்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் அராஜக ஆட்சியால் செம்மரக் கடத்தலை தடுக்க முடியாமல் அப்பாவி தமிழர்கள் மீது இதுபோன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட விசாரணை கமிஷன் வைத்து விசாரிக்க வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்தனர். தற்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடாகி உள்ளது. எனவே ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

மேலும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலை மட்டும் தட்டிக்கேட்டால் போதாது. இதுபோன்று தெரியாமல் செம்மரம் வெட்ட வரும் அப்பாவி கூலிதொழிலாளர்களின் நலனுக்காகவும் தட்டிக் கேட்க வேண்டும். மேலும் அப்பாவி கூலிதொழிலாளர்கள் மீது வேண்டும் எனறே துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+