"பாய்ந்து" வந்த சிங்கம்! "தூக்கியடித்த" விவசாயி! பசுவை காப்பாற்ற அசால்ட் செய்த நபர்! ஷாக் வீடியோ
காந்திநகர்: குஜராத்தில் ஆவேசமான சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தனது பசுவை விவசாயி ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மனிதர்கள் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிக்கும் போக்கு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இப்படி காடுகளில் பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், விலங்குகள் பெரும் துயரத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
காடுகள் குறைவதால் விலங்குகள் வேறு வழியின்றி உணவு தேடி அருகில் இருக்கும் ஊர்களுக்கு உள்ளே வருகிறது. இதனால் மனித மிருக மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மனித மிருக மோதல்: முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்த மனித மிருக மோதல் கணிசமாக அதிகரித்துவிட்டது. யானைகள், சிறுத்தைகள் ஊருக்குள் வருவது குறித்த செய்திகள் அதிகரித்துள்ளதே இதற்குச் சிறந்த உதாரணம். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது குஜராத்தில் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
குஜராத்தின் ஜூனாகத்தில் வசிக்கும் விவேக் கொட்டாடியா என்பவர் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதுதான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கம்: அங்தே இருந்த பசு ஒன்றின் மீது சிங்கம் பாய்ந்துள்ளது. தான் ஆசையாக வளர்த்த பசுவைச் சிங்கம் பிடித்ததைக் கண்டு பதறிய விவசாயி, துணிச்சலாக நடந்து சென்று சிங்கத்தை விரட்ட முயல்கிறார். இதை அந்த வழியாகச் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இறுதியில் அந்த விவசாயி வெற்றிகரமாகத் தனது பசுவைச் சிங்கத்திடம் இருந்து காத்துவிடுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்த மாட்டைச் சிங்கம் பிடித்துள்ளது. சிங்கத்தால் மாட்டைச் சரியாகக் கவ்வ முடியவில்லை என்பது போலவே அந்த வீடியோவில் தெரிகிறது.
பசுவின் உரிமையாளர்: சிங்கத்தின் பிடியில் இருந்து விடுபட அந்த மாடும் மிகத் தீவிரமாக முயல்கிறது. இருப்பினும், அதன் முயற்சி பலனளிக்கவில்லை. இவை அத்தனையும் சாலையின் நடுவில் நடக்கிறது. அந்த அந்த மாட்டின் உரிமையாளரான விவசாயி ஒருவர், சிங்கத்தை நோக்கி துணிச்சலாகச் சென்றுள்ளார். மேலும், கையை உயர்த்தியும் சத்தம் போட்டும் சிங்கத்தை விரட்ட முயன்றார்.
ગીર સોમનાથ જિલ્લાના આલીદર ગામે સિંહણ દ્વારા ગાય ઉપર હુમલો કરેલ ત્યારે ખેડૂતે #Credit કિરીટસિંહ ચૌહાણ પોતાની ગાયને એક ખમીરવંતો પ્રયાસ કરેલ અને સફળતા મળેલ.
— Vivek Kotadiya🇮🇳 BJP (@VivekKotdiya) June 29, 2023
ખુબ ખુબ સલામ#lion #animalattack #cow #lioness #kingofthejungle #hunt #wildlife #india #nationalgeographic #discovery pic.twitter.com/lDYGub9bfZ
தொடக்கத்தில் அந்த சிங்கம் இவரைக் கண்டு அஞ்சவில்லை. இதையடுத்து அந்த நபர் அருகே இருந்த பெரிய செங்கல்லை எடுத்து சிங்கத்தைத் தாக்க வந்தார். அதைக் கவனித்த சிங்கம் மாட்டைக் கவ்விக் கொண்டு செல்ல முயன்றது. இருப்பினும், கன்றுக் குட்டியின் எடை அதிகமாக இருந்ததால் அதனால் ஓட முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி இந்த சிங்கம் கன்றை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து கன்றுக் குட்டியின் அருகே சென்ற விவசாயி, அதற்கு எந்தவொரு தீவிர காயமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தார்.
எருமை மாடு: கடந்த மாதம் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அதில் எருமை மாடு ஒன்றைச் சிங்கம் விரட்டிக் கொண்டு வந்தது. அப்போது சமயோசிதமாகச் செயல்பட்ட அந்த எருமை மாடு முதலைகள் இருக்கும் ஆற்றின் அருகே சென்று தப்பிவிட்டது. முதலைகள் அதிகம் இருந்ததால், சிங்கம் அதன் அருகே வரவே பயந்துவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications