கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் ஆடையின்றி உருண்ட தமிழக விவசாயிகள்.. டெல்லியில் ஷாக்!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணமாக சாலையில் உருண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணமாக சாலையில் உருண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளுத்தும் வெயிலில் இந்த வயதான விவசாயிகள் வெறும் உடம்புடன் சாலையில் உருண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் ஒருஐ மாதத்தை எட்டவுள்ள நிலையில் இதுவரை மத்திய அரசு செவி சாய்க்க வில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக கூறி யாரோ ஒரு அதிகாரியை டெல்லி போலிசார் சந்திக்க வைத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் ஆடையின்றி நடுரோட்டில் இந்த கொளுத்தும் வெயிலில் உருண்டனர்.
பெரும்பாலும் 60 வயதை கடந்த விவசாயிகளே போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வயதில் அவர்கள் சாலையில் வெயில் உருண்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது பிரதமர் மோடி விவசாயிகளை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications