பார்க்க "ப்ரூக் பாண்ட்" மாதிரி இருந்தாலும்.. பரூக் அப்துல்லா நல்லா டான்ஸ் ஆடுறாரே!
டெல்லி: பரூக் அப்துல்லாவை எல்லோருக்கும் அரசியல்வாதியாக தெரியும். ராஜா குடும்பத்து வாரிசு என்று தெரியும். ஆனால் அவர் ஒரு நல்ல கலா ரசிகர்... அது மட்டுமல்ல, டான்ஸரும் கூட என்பதை என்டிடிவி விருது விழாவின்போது அறிய முடிந்தது. ரன்வீர் சிங்குக்குப் போட்டியாக செமையாக டான்ஸ் ஆடி அசத்தி விட்டார் இந்த காஷ்மீரத்து சிங்கம்.

என்டிடிவி இந்தியன் ஆப் தி இயர் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இதில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறந்த என்டர்டெய்னர் விருது ரன்வீருக்குக் கிடைத்தது.
அப்போது மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து அளித்து வந்த என்டிடிவியின் பர்க்கா தத், பரூக்கையும், ரன்வீரையும் மேடைக்கு அழைத்தார். பின்னர் ரன்வீர் நடித்த பாஜிராவ் மஸ்தானி படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இருவரையும் ஆடுமாறு கேட்டுக் கொண்டார்.
என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களேம்மா என்று சங்கோஜப்பட்டு சீன் போடாமல் பரூக் அப்துல்லாவும் நான் ரெடி என்று கூறி டக்கென டான்ஸையும் ஆரம்பித்தார். ரன்வீர் ஆட, அவரைப் பார்த்து பரூக் ஆட.. அடடா அடடா - தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் சிவாஜி, பத்மினி - போல இல்லை என்றாலும் கூட.. பார்க்க சூப்பராக இருந்தது.
ஆடி முடிந்ததும் பரூக் அப்துல்லாவிடம் ஓடிப் போய் அவரைக் கட்டிப்பிடித்து ஆசி வாங்கி சந்தோஷப்பட்டார் ரன்வீர். சும்மா சொல்லக் கூடாது 78 வயதான பரூக் அப்துல்லா, செமையாக ஆடினார். 30 வயதான ரன்வீருக்கு ஈடு கொடுத்து அவர் போட்ட ஸ்டெப்ஸ்.. சான்ஸே இல்லைங்க!
இதுகுறித்து ரன்வீரும் தனது டிவிட்டர் பக்கத்தில் புளகாங்கிதமடைந்து எழுதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மேடையிலேயே கூட ரன்வீர் பரூக் அப்துல்லாவைப் பார்த்து நீங்க மட்டும் நடிக்க வந்தா அமிதாப் பச்சன் கவலை அடைவார் என்று கூறி கலகலக்க வைத்தார்.
அதற்கு பரூக் அப்துல்லா, நிச்சயம், நான் நடிக்க விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அடுத்த பிறவியில் அதைப் பார்க்கலாம் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications