ஃபெரா விசாரணைக்கு தடை கோரிய விஜய மல்லையா மனு தள்ளுபடி! ரூ10 லட்சம் அபராதம் விதித்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தம் மீதான ஃபெரா வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய தொழிலதிபர் விஜய மல்லையாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன் வழக்கு செலவாக ரூ10 லட்சம் அபராதம் செலுத்தவும் விஜய மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான தயாரிப்புகளை வெளிநாட்டில் விளம்பரப்படுத்துவதற்காக நிதி ஏற்பாடு செய்ததில் வெளிநாட்டு பணபரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் (ஃபெரா) நடைமுறைகளை விஜய மல்லையா மீறினார் என்பது அமலாக்க பிரிவு குற்றச்சாட்டு.

மேலும் 1995ஆம் ஆண்டு டிசம்பரில் லண்டனை சேர்ந்த பென்னட்டன் பார்முலா என்ற நிறுவனத்துடன் கிங்பிஷர் மதுபான தயாரிப்புகளை வெளிநாட்டில் பிரபலப்படுத்துவதற்கு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் மல்லையாவிடம் விசாரணை நடத்தவும் அமலாக்க பிரிவு முடிவு செய்திருந்தது.
கிங்பிஷர் நிறுவனத்தின் சின்னத்தை லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது இடம்பெற செய்வதற்காக கடந்த 1996, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் 2 லட்சம் டாலர்களை மல்லையா அளித்துள்ளார். இதற்கு ரிசர்வ் வங்க வங்கியின் ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன்பே வெளிநாட்டு பணபரிமாற்ற ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குற்றச்சாட்டு.
இவை தொடர்பாக அமலாக்க பிரிவு அனுப்பிய சம்மன்களுக்கு பதிலளிக்காதததால் மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மல்லையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை அடுத்து மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தம் மீதான விசாரணைக்கு விஜய மல்லையா தடையும் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்படி அமலாக்க பிரிவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதன் மீதான இன்றைய விசாரணையின் போது விஜய மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான பெஞ்ச், வழக்கு செலவுக்காக ரூ10 லட்சம் அபராதம் செலுத்தவும் விஜயமல்லையாவுக்கு உத்தரவிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications