சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் இன்று வேட்பு மனு தாக்கல்! ஆட்சியை பிடிக்க போராடும் பாஜக, காங்கிரஸ்
போபால்: சத்தீஸ்கர் மாநில இரண்டாம் கட்ட தேர்தல் மற்றும் மத்தியப் பிரதேச மாநில தோ்தலுக்கான தேர்தல் நவம்பர் மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று இரு மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அதேபோல சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இரு மாநிலங்களிலும் காங்கிரஸும், பாஜகவும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகின்றன.

தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பா் மாதம் 7ம் தொடங்கி 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். ஒருவேளை இதில் பின்னடைவு ஏற்பட்டால் அது நாடாளுமன்ற தேர்தல் வெற்றியையும் பாதிக்கும். அதேபோல காங்கிரசுக்கும் இந்த தேர்தல் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
5 மாநிலங்களில் மிசோரம் மாநிலத்தில் நவம்பா் 7ம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 13ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை அங்கு 174 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. இதேபோல் சத்தீஸ்கர் மாநில முதல் கட்ட தோ்தலுக்கான நவம்பா் 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. தொடா்ந்து 2-ம் கட்ட தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வரும் 30-ம் தேதி கடைசி நாளாகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பா் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, 30-ம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற நவம்பா் 2-ம் தேதி கடைசி நாளாகும். இதேபோல் ராஜஸ்தானில் வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பா் 3-ம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications