கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் பற்றி எரிந்த தீ.. 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு படையினர்!
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலைய துணிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள துணி கிடங்கில், ஞாயிற்றுக்கிழமை (மே 18) மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. குடோனில் துணிகள் இருந்ததால், உடனடியாக தீ பிடித்து மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.

துணி குடோனில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து நிலையக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், கீழே தரைதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள், உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது.
இந்த தீ விபத்து மீட்பு பணிகளின் போது கேரள அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோழிக்கோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது." என்றார்.
கோழிக்கோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி கே.எம் அஷ்ரப் அலி கூறுகையில், "தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து தீயணைப்பு நிலையங்களும் விரைந்து செயல்பட்டன. இரவு 10 மணியளவில், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம், இப்போது அது முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications