குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, 200 யூனிட் இலவச மின்சாரம்! 5 வாக்குறுதிகள்.. கர்நாடக கேபினட் ஒப்புதல்
பெங்களூர்: 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடகா அமைச்சரவை மதிப்பீடு செய்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்வதற்கும் இந்த தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாகுறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரஸின் வாக்குறுதி.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர்.
முதல்வராகப் பதவியேற்ற சித்தராமையா, 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். இருந்தபோதும் இந்த வாக்குறுதிகள் உடனடியாக அமலுக்கு வரவில்லை. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற சுமார் ரூ65,000 கோடி நிதி தேவை. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் விமர்சித்த போது, ரூ3 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மாநிலத்துக்கு ரூ65,000 கோடி பெரிய சுமை இல்லை என்றார் முதல்வர் சித்தராமையா. இருப்பினும் 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் சித்தராமையா அரசு தடுமாறி வருகிறது என்கிற விமர்சனங்கள் தொடரவே செய்தன.

இந்த பின்னணியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தி 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டங்களை செயல்படுத்த ரூ50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் மதிப்பீடு செய்துள்ளது.
எந்த ஒரு முக்கிய முடிவையும் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் ஒரு அரசால் செயல்படுத்த முடியாது. அந்த வகையில் ஐந்து வாக்குறுதிகள் தொடர்பான முடிவுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது.., அதை எப்போது முதல் செயலாகத்துக்கு கொண்டு வருவது.., என்பதை எல்லாம் முதல்வரின் முடிவு. அது குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications