விடாது கறுப்பு! 150 பேர் உயிரை குடித்த குஜராத் மோர்பி ஆறு- 1979-ல் 2000 பேரை பலி கொண்டது- சாபமோ?
அகமதாபாத்: குஜராத்தின் மோர்பியில் மச்சு ஆற்று நடுவில் அமைக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 150க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதே குஜராத் மோர்பி மச்சு ஆற்றில் 1979-ம் ஆண்டு அணை உடைந்து 2,000க்கும் அதிகமானோர் பலியான பெருந்துயரமும் நிகழ்ந்திருக்கிறது.
குஜராத் மோர்பில் மச்சு ஆற்றின் குறுக்கே பழமையான கேபிள் பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த கேபிள் பாலம் பழுதடைந்த நிலையில் சீரமைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இப்புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கேபிள் பாலம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென திறக்கப்பட்டது. இதனால் கேபிள் பாலத்தில் பொதுமக்களும் பயன்படுத்த தொடங்கினர்.

கேபிள் பாலம்
அந்த கேபிள் பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் ஒரே நேரத்தில் ஏறி நின்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களப்படுத்தினர். இந்த மகிழ்ச்சி சிறிது நேரம்தான் நீடித்தது. திடீரென கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்ததில். இதில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே பெரும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது இச்சம்பவம்.

மச்சு ஆறு
இதே குஜராத்தின் மோர்பி மச்சு ஆறு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மனிதர்களை காவு வாங்கியும் இருக்கிறது. மச்சு ஆற்றின் குறுக்கே முதலாவது 1959-ல் கட்டப்பட்டது. 1972-ம் ஆண்டு மச்சு ஆற்றின் குறுக்கே 2-வது அணையும் கட்டப்பட்டது. 1979-ம் ஆண்டு வரலாறு காணாத பெருமழை மோர்பி பகுதியில் கொட்டித் தீர்த்தது.

1979 பெரு வெள்ளம்
1979-ம் ஆண்டு கனமழையாம் மச்சு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இப்பெருவெள்ளம் சுனாமி பேரலைகளைப் போல விஸ்வரூபம் எடுத்தது. இதனால் 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட அணை உடைந்தது. மச்சு ஆற்றை சுற்றிய 5 கிமீ நகரப் பரப்பு அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது.

2,000 பேர் பலி
மச்சு ஆற்று பெருவெள்ளத்தால் அணை உடைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இன்னமும் குழப்பம் உள்ளது. சுமார் 2,000 பேர் மரணித்துப் போயினர் என்பது பொதுவான கருத்து. ஆனால் 10,000 முதல் 20,000 பேர் வரை மச்சு ஆற்று வெள்ளத்தால் மாண்டு போயிருப்பர் எனவும் கூறப்படுகிறது. இதனை வைத்து திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்போது அதே மச்சு ஆறுதான் மீண்டும் மனித உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. என்ன சாபமோ? யார் அறிவார்?
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications