கேரளா வெள்ளம்: மனது உடைகிறது.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. பினராயி விஜயன் உருக்கம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மனதை உடைக்கிறது, இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மனதை உடைக்கிறது, இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை வெள்ளம் சூழ்ந்துள்ளது.இரண்டு நாட்களாக அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது.
|
நிலைமையை கொண்டு வர முடியவில்லை
தற்போது அங்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் இறங்கி இருக்கிறார்கள். 25 ஹெலிகாப்டர்கள் அங்கே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் இன்னும் நிறைய மீட்பு குழுக்கள் அங்கே வர உள்ளது. ஆனாலும் இன்னும் அங்கே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
|
மிக மிக மோசம்
இந்த வெள்ளத்தால், 30000 க்கும் அதிகமான மக்கள் இடமாற்றப்பட்டு இருக்கிறார்கள். 25000 மக்களை மீட்பு பணியினரால் தொடர்பு கொள்ள முடியாது தூரத்தில் இருக்கிறார்கள். 2500க்கும் அதிகமான கட்டிடங்கள் 24 மணி நேரத்தில் இடிந்து விழுந்து இருக்கிறது.
|
வருத்தம் தெரிவித்தார்
அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த நிகழ்வால் பெரிய அளவில் உடைந்து போய் உள்ளார் . ஆனாலும் மீட்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று நினைக்கவில்லை, மனது உடைகிறது என்று மிகவும் வருத்தமாக இந்த வெள்ளம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
|
இறங்கினார்
தற்போது கேரளாவில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் இந்த மீட்பு பணியில் இறங்கும்படி அவர் ஆணையிட்டுள்ளார். நேற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சில இடங்களை இவர் நேரில் சந்தித்தார். இன்று மீண்டும் அவர் நேரடியாக மீட்பு பணி நடக்கும் இடத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

உடைய வைக்கும் காட்சிகள்
இந்த வெள்ளம் குறித்து மனதை உடைய வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
[மூழ்கியது கேரளா.. பல இடங்களில் வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்]

பெரிய அழிவு
கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
[வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவு.. உடையும் வீடுகள்.. வெள்ளத்தில் மக்கள்.. என்ன நடக்கிறது கேரளாவில்?]
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications