For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதுகுறித்து பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் தங்களுடன் எத்தனை லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

எத்தனை பெட்டி,படுக்கை சொல்லுங்க:

எத்தனை பெட்டி,படுக்கை சொல்லுங்க:

அதாவது கையோடு எடுத்து வரும் லக்கேஜ்களையும் கூட அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிதியமைச்சகம் இதுதொடர்பாக புதிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளது.

ஒரு தடவை விண்ணப்பம் போதும்:

ஒரு தடவை விண்ணப்பம் போதும்:

அந்த நெறிமுறைக்கு சுங்க லக்கேஜ் தகவல் தெரிவிக்கும் முறைப்படுத்தும் சட்டத் திருத்தம் 2014 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய குடிமக்களாக இருந்தால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போகும்போது ஒரு முறை மட்டும் குடியுரிமைப் பிரிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும்.

மார்ச் 1இல் அமல்:

மார்ச் 1இல் அமல்:

அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வரும்போது அந்த விண்ணப்பத்தைக் கொடுக்கத் தேவையில்லை. மார்ச் 1ம் தேதி முதல் இந்த உத்தரவுகள் அமலுக்கு வருகின்றன.

தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஆப்பு:

தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஆப்பு:

இந்த புதிய உத்தரவின்படி தடை செய்ய்பட்ட பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட பொருட்களை எடுத்து வருவது தவிர்க்கப்படும், தடுக்கப்படும். மேலும் தங்க நகைகளை எந்த அளவுக்கு எடுத்து வருகிறார்கள் என்பதும் துல்லியமாக கணக்கிட்படும்.

சர்வதேச விமான நிலையங்கள்:

சர்வதேச விமான நிலையங்கள்:

இந்தியாவில் ஸ்ரீநநகர், அமிர்தசரஸ், ஜெயப்பூர், டெல்லி, அகமதாபாத், கவுஹாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கோவா, பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம், போர்ட் பிளேர் என 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Passengers flying into India will have to declare Indian currency exceeding Rs 10,000 being brought by them, according to new customs rules which will be implemented from next month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X